பதிவு செய்த நாள் :
குஜராத்தில் 2014ஐ விட 2019ல் பா.ஜ., அமோகம்

ஆமதாபாத்: குஜராத்தில், 2014 லோக்சபா தேர்தலை விட, 2019 தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றி வித்தியாசம் அதிகரித்துள்ளது.

   குஜராத், பா.ஜ., அமோகம்லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலின் போது, குஜராத் முதல்வராக, நரேந்திர மோடி இருந்தார். பாஜ.,வின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். 2014 தேர்தலில், குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளையும், பா,ஜ., கைப்பற்றியது.இதன்பின், குஜராத்தில், 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 182 தொகுதிகளில், 99ல் வென்று, ஆறாவது முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்தது.

ஆனால், தொகுதிகளும், ஓட்டு சதவீதமும்

குறைந்தது, பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தி யது. 'இதனால், இந்த லோக்சபா தேர்தலில், கடந்த முறையைப் போல, பா.ஜ., வெற்றி பெறுவது சந்தேகம் தான்' என, அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.ஆனால்,நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., 26 தொகுதிகளையும் கைப்பற்றி யது. அத்துடன், பா.ஜ., வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசமும், கடந்த முறையை விட, அதிகமாக உள்ளது.


கடந்த தேர்தலில், பிரதமர் மோடி உட்பட, ஆறு வேட்பாளர்கள் மட்டுமே, 3 லட்சம் ஓட்டுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஆனால், இம்முறை, 15 பா.ஜ., வேட்பாளர்கள், 3 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.நவ்சாரி தொகுதியில், பா.ஜ., வேட்பாளர், சி.ஆர்.பாட்டீல், 6.89 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


கடந்த தேர்தலில், நரேந்திர மோடி, வதோதரா தொகுதியில், 5.7 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.இம்முறை, பா.ஜ.,வின் ரஞ்சன் பட்,

Advertisement

5.89 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.கடந்த முறை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காந்தி நகர் தொகுதியில், 4.83 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இம்முறை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, 5.57 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.கடந்த தேர்தலில், குஜராத்தில் பதிவான ஓட்டுகளில், 60 சதவீத ஓட்டுகளை, பா.ஜ., பெற்றது. இம்முறை, அது, 62.2 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது,


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
06-பிப்-202006:00:14 IST Report Abuse

Sukumaran Sankaran Nairபிரச்சார உத்திகளைக் கையாண்டு,வாக்காளர்களை கவரும் பஜக வினருடைய உண்மை முகம் எதுவென்று காலங்கடந்து அறிந்து ஏமாறுவதை விட,அவர்களது நோக்கம் என்ன ,எப்படி,நாட்டையும் ,மக்களையும் ஒரே நேர்பபாதையில் வழிநடத்தி,வெற்றியடைய எந்தவிதமான தாக்கமுமின்றி, அவர்கள் மனத்தில் இடம் பிடிக்கும் கட்சி சார்பற்ற அரசியலுக்கு தேர்ந்தெடுக்கும் தகுதிக்கு வாக்காளர்களை பக்குவமடையச்செய்யாமல். தேர்தலை நடத்துவது முறையற்றதாகும். தூய்மையான,காழ்ப்புணர்வுடன் இல்லாத மனப்பக்குவமிக்க மக்கள் சேவைக்கு தங்களை அர்ப்பணிக்கும் வேட்பாளர்களை நல்லாட்சி முறைக்கு தகுந்த ஆளுமையை தரமுடியும் . தலைவர்களைக்கொண்ட ஆளுமையை தரமுடியும் .

Rate this:
Nalam Virumbi - Chennai,இந்தியா
26-மே-201914:36:38 IST Report Abuse

Nalam Virumbiஒரு வருடம் டாஸ்மாக்கில் ஓ சி தண்ணின்னு சொல்லுங்க, தமிழன் ஓட்டு போடுவான்

Rate this:
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
26-மே-201912:16:21 IST Report Abuse

JEYAM தமிழன் JEYAMஎதுக்கு இப்படி மாஞ்சிமான்ஜி ஓட்டுபோட்டார்களாம்.. ? படேல் சிலையை பார்த்த பூரிப்பா இருக்குமோ ??

Rate this:
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
27-மே-201915:55:25 IST Report Abuse

ஆ.தவமணி,   இருக்கலாம் .. அதனால் என்ன தவறு? .. தமிழகத்தில், மாதவி குலத்தின் வழித்தோன்றல்கள் .. கண்ணகி சிலை வைத்த உடன் அதில் மயங்கி தமிழர்கள் ஓட்டுப்போட்டது போல அங்கு ஓட்டு போடவில்லையே? ஒரு தலைசிறந்த தேசபக்தரின் சிலையைப்பார்த்து மயங்கித்தானே ஓட்டுப்போட்டுள்ளனர்? ...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X