ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஆட்சி அமைக்க, மோடிக்கு, ஜனாதிபதி, அழைப்பு

புதுடில்லி: புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி. இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். வரும் மே-30 ஆம் தேதி பிரதமராக மோடி பதவி ஏற்பார் என தெரிகிறது.
முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் அளித்தார் மோடி. அவருடன் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் ஜனாதிபதியை சந்தித்தனர்.
மோடி பதவி ஏற்பு விழாவில் உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மோடி பேசியதாவது : ஆட்சி அமைக்க அழைத்த ஜனாதிபதிக்கு நன்றி . அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய உச்சங்களை தொடுவோம். விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் ஜனாதிபதியிடம் அளிக்கப்படும். புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் .என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BJP TEAM - மதுரை,இந்தியா
26-மே-201900:46:08 IST Report Abuse
BJP TEAM பாரத தேசத்தின் பாதுகாவலன் மோடி ஜி ..., ஜெய்ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-மே-201921:51:07 IST Report Abuse
அசோக்ராஜ் நல்ல செய்தி. பதவி ஏற்கட்டும். நாட்டு வளங்கள் பெருகட்டும். பாரதம் வளரட்டும். மங்களம் பரவட்டும். பாரத் மாதா கீ ஜெய்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X