சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 25, 2019
Advertisement
 'டவுட்' தனபாலு

மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார்: மீத்தேன்,நியூட்ரினோ, நீட், ஜி.எஸ்.டி., என அனைத்தையும், தி.மு.க., கொண்டு வந்துவிட்டு, நாங்கள் எடுத்து வந்ததுபோல், மக்களிடம் தவறான பிரசாரம் செய்தனர். அது, எடுபட்டுள்ளது.

டவுட் தனபாலு: உங்க பார்வையில், இந்தத் திட்டங்கள் எல்லாம், நல்லதா, கெட்டதா... நீங்களும், உங்க கூட்டணிக் கட்சிகளும், இதை, எந்தக்கோணத்தில் முன்னெடுத்தீங்க... யாருக்காக, இவற்றைப் பற்றி பேசாமல், அமைதி காத்தீங்க... அங்கே தான் சிக்கலே... இதுல, எதிர்க்கட்சிகளை குறை கூறி என்ன பயன் என்பதுதான், என்னோட, 'டவுட்!'


பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி:ம.தி.மு.க.,வை ஆரம்பித்த இடத்திலேயே முடித்து விட்டனர். அதேபோல், அ.ம.மு.க.,வும் முடிவுக்கு வரும்.

டவுட் தனபாலு: தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் இயக்கம் கண்ட வைகோ, கடைசியில், தி.மு.க.,விடமே சரணாகதி அடைந்து, கூட்டணி அமைத்துவிட்டார்... அதேபோல், தினகரனும், அ.தி.மு.க.,வோடு, விரைவில் கூட்டணிக்கு வருவார் என்பதைத் தானே, இவ்வளவு சுருக்கமாச் சொல்றீங்க... தினகரனை ஏற்க தயாராகிட்டீங்களா... இந்த, 'டவுட்'டைக் கொஞ்சம் விரிவா விளக்குங்களேன்...!


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: மீண்டும், மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில், தே.மு.தி.க., தொடர்ந்து,அயராது ஈடுபடும்.
டவுட் தனபாலு: ஏதாவது தேர்தல் தேதி அறிவித்து, பிரதானக்கட்சிகளில் கூட்டணி எல்லாம் இறுதியான பிறகு, கடைசிநாளில், மிடுக்கு காட்டி,களத்தில் குதிப்பதையே வழக்கமாக் கொண்டிருக்கீங்க... இதைத் தவிர, கடந்த எட்டு ஆண்டுகளில், என்ன ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்திருக்கீங்க என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்... தெரிஞ்சுக்குவோம்...!


துணை முதல்வர்,பன்னீர்செல்வம்: தமிழகத்தில், மீண்டும் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்ற வகையில், இடைத்தேர்தல் முடிவு, நல்ல தீர்ப்பாகவந்திருக்கிறது.

டவுட் தனபாலு: இடைத்தேர்தல் நடந்த, 22 தொகுதிகளில், 21 தொகுதிகள், அ.தி.மு.க., வசம் இருந்தவை... திருவாரூர் மட்டும் தான், தி.மு.க., வென்றிருந்த, தொகுதி... இப்போ, தேர்தல் முடிவு எப்படி வந்திருக்கு; அது, எதை உணர்த்துது என்பது குறித்து, எப்பத்தான் யோசிக்கப் போறீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!


சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா: லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்தது, வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், கட்சித் தொண்டர்கள் இதற்காக கவலைப்படக் கூடாது. அரசியலில், வெற்றியும், தோல்வியும் சகஜம்.
டவுட் தனபாலு: வெற்றியும், தோல்வியும், மாறி மாறி வந்தால், நீங்க சொல்வது சரி... ஆனா, காங்., தொடர்ந்து, தோல்விகளைத் தானே சந்தித்து வருது... இதற்கு கவலைப்படாமல், எப்படி கட்சி வளரும்... இவ்வளவு சொல்லிட்டீங்க... அப்படியே, 'தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, எந்த நிர்வாகியும், பதவி விலக வேண்டாம்'னு, அறிக்கையும் விட்டுடுங்க... இது, ராகுல், பிரியங்காவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்பதில், 'டவுட்'டே வேண்டாம்...!


அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர், தங்க தமிழ்ச்செல்வன்: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை மக்கள் ஏற்காததால், தி.மு.க., கூட்டணிக்குஓட்டளித்துள்ளனர்.
டவுட் தனபாலு: உங்களை எல்லாம், ஒரு மாற்றாக மக்கள் நினைக்கவே இல்லைன்னு, இப்பவாவது ஒப்புக்கிட்டீங்களே... ஆரம்பத்தில், அ.தி.மு.க., தலைமையை குறை கூறினீங்க... இப்போ, கூட்டணியை குறை கூறுறீங்க... அடுத்து, இன்னும் என்னென்ன காரணங்களை அடுக்கப் போறீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X