பொது செய்தி

இந்தியா

குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (41)
Advertisement

லக்னோ: மே.,23-ல் பிறந்த உ.பி., மாநில குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயரிட்டுள்ளனர் முஸ்லிம் தம்பதியினர்.






ஏப்ரல் மாதம் முதல் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வந்த17-வது லோக்சபாவிற்கான தேர்தல் முடிவுகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டன.இதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.






இந்நிலையில் உ.பி., மாநிலம் கோண்டா அருகே உள்ள வாசிர்கன்ஜ் பகுதியை சேர்ந்தவர் மேனஜ் பேகம். இவரது கணவர் முஸ்டாக் அகமது வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இந்த தம்பதியினருக்கு தேர்தல் முடிவு வெளியான 23-ம் தேதி ஆண்குழந்தை பிறந்தது. பிரதமராக யார் வந்துள்ளார் என மனைவியிடம் கேட்டார். அப்போது அவர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார் என மேஜன் பேகம் தெரிவித்துள்ளார்.
உடனே தம்பதிகள் குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் சூட்டுவது என்று முடிவு செய்தனர். இதற்குமேனஜ் பேகமின் மாமனார் மொகமத் இத்ரிஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் அது அவர்களின் குடும்ப விசயம். மற்றவர்கள் அதில் தலையிடமுடியாது என்றும் கூறினார். இதனையடுத்து குழந்தையின் பெயர் நரேந்திர தோமர் தாஸ் மோடி என பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து குழந்தையின் தாய் மேனஜ் பேகம் கூறுகையில், மோடியை போன்று எனது மகன் வெற்றி கரமானவராக இருக்க வேண்டும். என விரும்புகிறேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajit Kumar - Chennai,இந்தியா
26-மே-201913:18:13 IST Report Abuse
Ajit Kumar முஸ்லிம்கள் சாதாரணமாக நல்ல முறையில் இப்படி செய்கிறார்கள், ஆனால் அவர்களோ இவர்களை துன்புறுத்துகிறார்கள் , என்ன நியாயம் இது. அவர்கள் மாட்டுக்கு குடுக்கும் மதிப்பு கூட முஸ்லீம் உயிர்களுக்கு குடுப்பது இல்லை
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
26-மே-201916:34:53 IST Report Abuse
 nicolethomsonகைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெயர் தவுபீக் ,...
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
26-மே-201919:24:12 IST Report Abuse
 nicolethomsonஅது இந்து பெயரா கிருத்துவர் பெயரா இல்லை எந்த மதத்தில் அந்த பெயர் வைப்பாங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லு...
Rate this:
Share this comment
Ajit Kumar - Chennai,இந்தியா
27-மே-201915:22:23 IST Report Abuse
Ajit Kumarஇதற்கும் மதத்திற்கும் என்ன சம்மதம்...
Rate this:
Share this comment
Cancel
26-மே-201913:17:22 IST Report Abuse
Chandran என்ன கைபுள்ள வெறும் காத்துதான் வருது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-மே-201910:51:21 IST Report Abuse
தமிழ்வேல் ஜாதிமத பேதம் பார்க்காமல் பெயர் சூட்டியதற்கு பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X