பதிவு செய்த நாள் :
கட்சி தாவியவர்களுக்கு கிடைத்தது தோல்வி

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சி தாவி, வேறு கட்சி சார்பில் போட்டியிட்ட, முக்கிய தலைவர்கள் பலர், தோல்வியை சந்தித்துள்ளனர்.

 கட்சி, தாவியவர், கிடைத்தது ,தோல்வி



சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், வி.ஐ.பி.,க்கள் பலருக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஜனதா தளம்பீஹார் மாநிலம், பாட்னா சாஹிப் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, பாலிவுட் முன்னாள்

நடிகர், சத்ருகன் சின்ஹா, மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்திடம் தோல்வி அடைந்தார்.


சத்ருகன் சின்ஹா, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரசில்சேர்ந்தார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, சரத் யாதவ், இந்த தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், பீஹாரில் போட்டி யிட்டு, தோல்வி அடைந்தார்.தேசியவாத காங்கிரசி லிருந்து விலகி, காங்., சார்பில் போட்டியிட்ட, தாரிக் அன்வருக்கும், தோல்வியே பரிசாக கிடைத்தது. போபால் தொகுதி பா.ஜ.,விலிருந்து வெளியேறி, காங்கிரசில் சேர்ந்த, முன்னாள் கிரிக்கெட் வீரர், கீர்த்தி ஆசாத்தும்தோல்வி அடைந்தார்.


இதேபோல், கடைசி நேரத்தில் கட்சி தாவிய, 47 பேர், இந்த தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளனர்.அதே நேரத்தில், தேர்தல் பிரசாரத்தின்

Advertisement

போது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, பெண் சாமியார், பிரக்யா சிங் தாக்குர், மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.இவர், காங்., மூத்த தலைவர், திக்விஜய் சிங்கை தோற்கடித் தார்.மற்றொரு சர்ச்சை வேட்பாளரான, சமாஜ்வாதியின், அசம் கான், உ.பி.,மாநிலம், ராம்பூரில், பா.ஜ., வேட்பாளரும், நடிகையுமான, ஜெயப்ரதாவை வீழ்த்தி, வெற்றி பெற்றார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
26-மே-201915:06:38 IST Report Abuse

 N.Purushothamanசத்ருகனுக்கு தன் வாயே சத்ருவாகிடுச்சி ...

Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-மே-201911:59:19 IST Report Abuse

கல்யாணராமன் சு.சத்ருகன் சின்ஹாவை பொறுத்தவரை, பாஜக அவரை மிகவும் சாமர்த்தியமாக கையாண்டது .. கடந்த நான்கு+ வருஷங்களாகவே, மந்திரி பதவி கிடைக்காத ஆத்திரத்தில், அவர் அரசையும், மோடி உட்பட பலரையும் திட்டிக்கொண்டிருந்தார் ... வெளிப்படையாகவே ஊழல் கட்சிகளான RJD, காங்கிரஸ் மற்றும் AAP கட்சிகளுடன் உறவாடினார்.. அவரது எண்ணமெல்லாம் என்னவென்றால், பாஜக தன்னை வெளியேற்றிவிடும், அதன் மூலம் தியாகி பட்டம் பெற்று, அடுத்த தேர்தலில் இன்னொரு கட்சியின் மூலம் வெற்றி பெறலாம் என்பது.... அப்படி பாஜக தன்னை வெளியேற்றாதபோது, தன்னையே மீண்டும் வேட்பாளராக நியமிப்பார்களோ என்ற நப்பாசையும் வந்தது.. அதையும் செய்யாமல், கடைசியாக இன்னொருவரை நியமித்து இவர் கழற்றிவிட்டதன் மூலம், இவரை காட்டிலும் அறிவுள்ளவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துவிட்டார்கள்.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
26-மே-201910:46:08 IST Report Abuse

Indhuindianஅருண் ஷோரி, யஸ்வந்த் சின்ஹாவுடன் காணாமல் போய்விடவும் அப்படியே உங்களுக்கு கூவும் அந்த வக்கீல்களையும் கூப்பிட்டு போகவும்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X