பதிவு செய்த நாள் :
அமேதியில் ராகுல் தோல்விக்கு காரணம் என்ன?

அமேதி : கடந்த, 1980ல் இருந்து, காங்., குடும்ப சொத்தாக இருந்த, உத்தர பிரதேசத்தின் அமேதி லோக்சபா தொகுதியில், காங்., தலைவர் ராகுலின் தோல்விக்கு முக்கிய காரணம், கிராமப் பகுதியில் உள்ள மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாததே எனக் கூறப்படுகிறது.

 அமேதி, ராகுல், தோல்வி, காரணம் ,என்ன?


காங்கிரசின் கோட்டைலோக்சபாவுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், உத்தர பிரதேசத்திலுள்ள, அமேதி தொகுதியின் முடிவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தொகுதியில், முன்னாள் பிரதமர் இந்திராவின் இரண்டாவது மகனான, சஞ்சய், 1980ல் வென்றார். அவரைத் தொடர்ந்து, இந்திராவின் மூத்த மகன், ராஜிவ், நான்கு முறை இங்கு வென்றுள்ளார்.அவருடைய மனைவி, சோனியா, 1999ல், இங்கு வென்றார்.ராஜிவ் - சோனியாவின் மகனும், காங்., தலைவருமான, ராகுல், இந்தத் தொகுதியில், தொடர்ந்து, மூன்று முறை வென்றார். காங்கிரசின் கோட்டை என்றழைக்கப்படும் இந்தத் தொகுதியில், தற்போது நடந்த தேர்தலில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 55 ஆயிரத்து,120 ஓட்டுகளில், ராகுலை வென்றார்.கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், ராகுல்,

1.07 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ஸ்மிருதி இரானியை வென்றார்.கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும், ஸ்மிருதி இரானி இந்தத் தொகுதிக்கு அடிக்கடி பயணம் செய்து, மக்களை சந்தித்து வந்தார்.அவருடைய கடின உழைப்பே, இந்தத் தேர்தலில், ராகுல் தோல்விக்கு காரணமானது.பிரசார யுக்திஇது குறித்து, அமேதி தொகுதி மக்கள் கூறியதாவது: கடந்த, 1980ல் இருந்து இந்தத் தொகுதி, முன்னாள் பிரதமர் இந்திரா குடும்பத்தாரின் சொத்தாகவே இருந்து வந்துள்ளது.கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, பா.ஜ.,வின் மத்திய அமைச்சராக பணியாற்றிய, ஸ்மிருதி இரானி, இங்கு தீவிரமாக களமிறங்கினார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தினார்; மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். அவருடைய தீவிர பிரசாரம், காங்., கோட்டையை தகர்க்கும் வகையில் அமைந்தது.


தொகுதியின், எம்.பி.,யாக இருந்த ராகுல், அவ்வப்போது இங்கு வருவார். ஆனால், அமேதி தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு, அவர் அதிகம் சென்ற தில்லை. கட்சித் தலைவராவதற்கு முன்பே அப்படிதான் இருந்தார்.அவருக்கு ஆலோசனை வழங்கும் குழுவினர், சரியான பிரசார யுக்தியை வகுத்து தரவில்லை. அதேநேரத்தில், ஸ்மிருதி இரானி, ஒவ்வொரு நடவடிக்கையையும் திட்டமிட்டு செயல்படுத்தினார். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் சென்று, பா.ஜ., அரசின் திட்டங்கள், மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து, அவர் நேரடியாக விளக்கினார்.எடுபடவில்லை

ராகுலின் தங்கை, பிரியங்கா வின் பிரசாரமும்

Advertisement

இங்கு எடுபடவில்லை. அவரும் விமான நிலையத்தில் இறங்கி, நகர்பகுதிகளில் மட்டுமே மக்களை சந்தித்தார். நெடுஞ்சாலையில் காரில் போகும்போது, கையை அசைத்தால், ஓட்டு கிடைத்து விடுமா என்ன.முன்னாள் பிரதமர் ராஜிவ், எம்.பி.,யாக இருந்தபோது, தொகுதி யில் மேற்கொண்ட பணிகள் குறித்து, தற்போதுள்ள இளம் வாக்காளர்களுக்கு தெரியாது. பா.ஜ.,வின் வளர்ச்சித் திட்ட பிரசாரங்கள் அவர்களை ஈர்த்துள்ளது.
அதனால், இளம் வாக்காளர்களின் ஓட்டு, அதிகளவில், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், அமேதி தொகுதிக்குட்பட்ட, ஐந்து சட்டசபை தொகுதிகளில், நான்கில், பா.ஜ., வென்றது. ஒன்றை மட்டுமே காங்., வென்றது.


அதன் பிறகும், இந்த, நான்கு தொகுதிகளில் கட்சியை வளர்ப்பதற்கான முயற்சிகளை, காங்., மேற்கொள்ளவில்லை. மொத்தத்தில், தொகுதி மக்களுடன் அதிக அளவு நேரடி தொடர்பு இல்லாததே, ராகுலின் தோல்விக்கு முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
20-ஆக-201910:30:50 IST Report Abuse

Sukumaran Sankaran Nairஎப்படி இது சாத்தியமாகும்? மக்களை கிள்ளுக்கீரையாக மதிக்கும் இந்த கடும்போக்கு வாதிகள் அதிகாரம் கைக்கு வந்தவுடன் அதை தந்தவர்களிடமே தங்கள் சுயரூபத்தை காட்டுவது குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தலாம். பொய்யுடையோன் ஒருவன் தன் சொல் வன்மையால் கூறும் எதுவுமே நம்பிக்கை மோசடியை ஆதரிப்பதாகும். ஒரே தேர்தல்,ஒரே நாடு ஒரே உலகம் ஒரே மக்கள் எனும் தெய்வீக நாகரிக கட்டமைப்பை அதன் இன்றியமையாத ஒப்பந்தம் பற்றிய அறிவார்ந்த சமூக அமைப்பு தோற்றுவிப்பதற்கு,தன்மை மாற்ற ஆனமிக போதனைகள்,பயிற்சித்திறன்களுடன் திட்டங்கள் அவசியம். காலம் கனிந்தாலும் ,மக்கள் பக்குவமடைய,அவர்களை புனரமைக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்று, நூலும் இழையும் இசையும் நாதமும் போல் இணக்கமான உலகம் மெய்ப்படும்படி வருவதற்கான நூற்றாண்டில்,கட்சிகளால் சிதறுண்டு கிடக்கும் வரையில், கண்ணெதிரே தோன்றும் அந்த பொது நல அரசு வருவதற்கான தகுதி இன்னமும் கனிவடையவில்லை. தீவிரவாதிகள் மக்களை திசைதிருப்ப எண்ணும்போது,நாமும் தீவிர தன்மை மாற்றும் உலகநீதி மன்ற வழிகாட்டலை பின்பற்றுவதே சிதைவுகளிலிருந்து நமது தலைமுறைகளை காப்பாற்ற நாம் செல்ல வேண்டிய பாதையாகும்.

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
26-மே-201918:41:40 IST Report Abuse

C.Elumalaiஏபிசிடி, மோடியோ,பிஜேபியோ அவர்களது, கூட்டணி கட்சியோ,எந்த பிரச்சாரபொது கூட்டத்திலாவது,எங்களுக்கு வாக்களித்தால் 15லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கிறோம்,என்ற வாக்குறுதி கொடுத்தார்களா?{அ} பேசினார்களா? இதைமுதலில் சொல் ஏபிசிடி குவைத். பொய்யைபேசி பேசியே மோடிஜி மீது களங்கத்தை உண்டு பண்ணாதே பாய். விஷத்தை தமிழ்மக்கள் மீது வீசி அவர்களையும் விஷமாக்கிவிடாதே பாய். விஷம் உன்னோடுவே,இருக்கட்டும்.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-மே-201914:54:34 IST Report Abuse

Natarajan Ramanathanமக்கள் ஓட்டு போடாததுதான் காரணம்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X