'லைசென்ஸ்' ரத்து எதிர்த்து வழக்கு 'ஏர் இந்தியா'வுக்கு 'நோட்டீஸ்'

Added : மே 26, 2019
Advertisement

சென்னை, திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவர் சேதப்படுத்திய சம்பவத்தில் 'பைலட்' உரிமத்தை 'சஸ்பெண்ட்' செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நிலையத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியது. மும்பையில் விமானம் தரையிறக்கப்பட்டு பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுற்றுச்சுவர் சேதமடைந்த விபரம் பைலட்டுக்கு தெரியவில்லை. இந்த சம்பவம் ௨௦௧௮ அக்டோபரில் நடந்தது. விசாரணை நடத்திய துறை அதிகாரிகள் விமான பைலட் ஆக பணியாற்றிய சென்னையை சேர்ந்த கணேஷ் பாபுவின் பைலட் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்து செய்தனர்.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கணேஷ்பாபு தாக்கல் செய்த மனு:இதுவரை ௪௨௭௦ மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது பற்றி பைலட் ஆன எனக்கும் சக பைலட்டுக்கும் தெரியவில்லை; பயணியரும் எந்தவித புகாரையும் தெரிவிக்கவில்லை. பத்திரமாகவே விமானம் இயக்கப்பட்டது.விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவால் மும்பையில் விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தை விபத்தாக கருதி பைலட் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளனர்; இது சட்டவிரோதமானது.எனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஏர் இந்தியா நிர்வாகம் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஜூன் ௧௦ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X