சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

பிரசாரத்தில் காங்கிரஸ் தவறவிட்ட புள்ளிகள்!

Added : மே 26, 2019 | கருத்துகள் (8) | |
Advertisement
வெற்றிக்கு ஒரு கதை இருப்பதைப் போலவே, தோல்விக்கும் ஒரு கதை இருக்கும்.இரண்டுக்கும் இடையே தொடர்பு இருப்பதும், தவிர்க்க முடியாதது. 17வது லோக்சபா தேர்தலுக்கான, ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிமிடத்தில் இருந்தே, என்னுள் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் வளைய வர ஆரம்பித்தன.கடந்த ஓராண்டாக நடைபெற்ற பல்வேறு விஷயங்கள், பேசப்பட்ட கருத்துகள், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று,
 பிரசாரத்தில் காங்கிரஸ் தவறவிட்ட புள்ளிகள்!

வெற்றிக்கு ஒரு கதை இருப்பதைப் போலவே, தோல்விக்கும் ஒரு கதை இருக்கும்.இரண்டுக்கும் இடையே தொடர்பு இருப்பதும், தவிர்க்க முடியாதது.

17வது லோக்சபா தேர்தலுக்கான, ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிமிடத்தில் இருந்தே, என்னுள் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் வளைய வர ஆரம்பித்தன.கடந்த ஓராண்டாக நடைபெற்ற பல்வேறு விஷயங்கள், பேசப்பட்ட கருத்துகள், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று, ஒவ்வொன்றாக கண்சிமிட்டத் தொடங்கின.மக்களை போலவே, இவை அனைத்தையும், நானும் கேட்டு வந்திருக்கிறேன்; பார்த்து வந்திருக்கிறேன்.இவை தான், நம் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துபவை. இவற்றுக்குள் தான், ஒரு கட்சியின் வெற்றியும், மறு கட்சியின் தோல்வியும் அடங்கியிருக்கின்றன.

காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ள இடங்களைப் பார்க்கும்போது, எனக்குத் தோன்றியவை, இவை தான்:புல்வாமா தாக்குதல் முதல் புள்ளி. சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள், 40 பேர், இதில் மரணம் அடைந்தனர்.எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின், மோசமான பாதிப்பு இது. இதில், மாண்ட பல வீரர்களின் உடல்கள், அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்குப் போய்ச் சேர்ந்தபோது, அங்கே அதிர்ச்சி அலைகள் எழுந்தன.உண்மையில், ஒவ்வொரு குடும்பமும் வெகுண்டெழுந்தது. நேரடி போரில் மாண்டிருந்தால், அதை வீர மரணம் என்று கொண்டாடியிருக்கலாம். மறைமுகமாக, கோழைத்தனமாக தாக்குதல் தொடுக்கப்பட்டு, வீரர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.மக்கள் மத்தியில் எழுந்த, இந்த அதிர்ச்சியலையையும், அதன் பின்னே இருந்த வலியையும், அதனால் எழுந்த நியாயமான கோபத்தையும், பா.ஜ., உணர்ந்து கொண்டது.உடனே, அதற்கான பதில் தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என்ற, முனைப்பு எழுந்தது. 10 நாட்கள் கழித்து, பாலகோட்டில் தாக்குதல் தொடுத்து, பயங்கரவாத முகாம்களை அழித்தது, இந்திய விமானப் படை.வீரர்களை இழந்த குடும்பங்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், இத்தாக்குதலைத் தாங்களே தொடுத்ததாக கருதினர். அதன் பெருமையைத் தாங்களே பெற்றதாகக் கருதினர்.

காங்கிரசும், இதர எதிர்க்கட்சிகளும் தவறவிட்ட முதற்புள்ளி இது.எல்லாரும் எள்ளி நகையாடினர். தாக்குதல் தொடுத்த, ஜெயிஷ்- - இ- - முகம்மதுவை கண்டிப்பதை விட்டு, நம்ம ஊர் அறிவுஜீவிகள், பா.ஜ., அரசாங்கத்தைக் குறை சொல்ல ஆரம்பித்தனர். அந்தப் பக்கம், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பயணம் செய்கின்றனர் என்பது, எப்படி ஜெய்ஷ்- - இ -- முகம்மதுவுக்குத் தெரிந்தது; எப்படி அந்தப் பாதையில், வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனம் அனுமதிக்கப்பட்டது என்று, விதவிதமாக குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.அதாவது, கொன்றவனை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட நம்மையே கேள்வி எழுப்பிக் கொச்சைப்படுத்துகின்றனர் என்பதை, மக்கள் உணர்ந்தனர். பாதுகாப்பு, தேசியம் ஆகிய விஷயங்கள் வரும்போது, அவை கேள்விக்கு அப்பாற்பட்டவை. சந்தேகங்கள், அங்கே எழுப்பப்படக் கூடாது.ஆனால், அங்கே தான் காங்கிரசும், இதர எதிர்க்கட்சிகளும் சந்தேகங்களை எழுப்பின; கேலி பேசின.மோடியையும், பா.ஜ., வையும் விமர்சிப்பதாக, எதிர்க்கட்சிகள் நினைத்தன. ஆனால், அதை, நம் தேசிய உணர்வு மீது வைக்கப்பட்ட விமர்சனமாக, மக்கள் எடுத்துக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்னும் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், 'தேசத் துரோகச் சட்டமும், அவதுாறு சட்டமும் நீக்கப்படும்; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் திருத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இது, தேசப் பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய முடிவு என்றும், மக்கள் கருதினர்.'தேசியவாதம்' என்பது, ஒரு வலுவான உணர்வு நிலை. அதைக் கொச்சைப்படுத்தியதன் விளைவு, இக்கட்சிகள் மீது, மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை; வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டன.

காங்கிரஸ் தோல்விக்கான, இரண்டாவது மிக முக்கியமான காரணம், 'காவலாளியே கள்வன்' என்ற வாசகம்.'ரபேல் போர் விமானம் வாங்குவதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன; அதனால், தனியார் நிறுவனம் பெரிய பலனை அடைந்தது' என, காங்கிரஸ் கட்சி, தொடர்ச்சியாக குற்றம் சாட்டியது. விஷயம் அதுவல்ல... அதில் பிரதமரைக் குறை சொல்ல துணிந்தபோது, பேசப்பட்ட வாசகம், நம் மக்களின் நெஞ்சத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.நம் ஊரில் தான், காலில் விழுவது, ஒரு அரசியலாகி விட்டது. ஆனால், வட மாநிலம் முழுவதும், அது உண்மையான மரியாதையோடு செய்யப்படுவது. ஆசிர்வாதம் வாங்குவது என்பது, இந்திய விழுமியங்களில் ஒன்று. அந்த அளவுக்கு மரியாதையை விரும்பக்கூடிய மக்கள் மத்தியில், பிரதமரை, 'கள்வன்' என்று சொல்வது, எதிர்மறை எண்ணத்தையும், வெறுப்பையுமே ஏற்படுத்தியது.

உதாரணமாக, இந்தத் தேர்தலின்போது, ஆந்திரப் பிரதேசத்தில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த, ஜெகன்மோகன் ரெட்டி, தொடர்ச்சியாக, சந்திரபாபு நாயுடுவை மேடை தோறும் விமர்சித்து வந்தார். ஆனால், எங்கேயும் அவர், கண்ணியம் குறைந்து பேசியதில்லை. 'சந்திரபாபு நாயுடுகாரு' என்று தான் சொல்வார்.இந்தக் கண்ணியம், நம் இந்திய பண்பாட்டின் விளைவு; மூத்தோருக்கு காட்டும் மரியாதை. மக்களின் மனத்தில் வேரூன்றியிருக்கும்,இந்த மதிப்பீடுகளைப் புரிந்து கொள்ள ராகுல் தவறி விட்டார். அதன் விளைவு தான், பிரசாரத்தின்போது எங்கே பேசினாலும், பிரதமரை, 'கள்வன்' என்று, ஒருமையில் குறிப்பிட ஆரம்பித்தார்.அது, பா.ஜ., மீதும், அதன் முடிவுகளின் மீதும் வைக்கப்பட்ட விமர்சனமாக அமையவில்லை. மாறாக, மோடி என்ற தனிமனிதர் மீது வைக்கப்பட்ட அவதுாறாகவே கருதப்பட்டது.பத்தோடு பதினொன்றாக இருக்கும், மற்றொரு அரசியல்வாதியாக மோடியைப் பார்க்கவில்லை, மக்கள். அவர் மீது வீசப்பட்ட அவச்சொல், இந்திய பாரம்பரிய மரபுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதினர். தனிப்பட்ட அளவில், தங்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டாகவே, அதைக் கருதினர். காங்கிரஸ் தவறவிட்ட, இரண்டாவது புள்ளி இது.மக்கள் உணர்வுமயமானவர்கள். மரபான மதிப்பீடுகள், அவர்களது முடிவுகளை வழிநடத்துகின்றன. என்ன தான் நாம் நவீனமாக உடை உடுத்தினாலும், பேசினாலும், பழகிக்கொண்டாலும், மதிப்பீடுகளே, நம்மை வழி நடத்துகின்றன. இதை, காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தான், 2019 தோல்வி உணர்த்துகிறது.


தமிழக முடிவுக்கு என்ன அர்த்தம்?தமிழகத்தில், 1967க்குப் பின், எந்த தேசிய கட்சியும் காலுான்ற முடிந்ததில்லை. தி.மு.க., அல்லது அ.தி.மு.க., தோளில் மட்டுமே, இவை சவாரி செய்துள்ளன. இதை, வேறு விதமாக பார்க்க வேண்டும். டில்லி என்று வரும்போது, தேசிய கட்சி ஒன்றுக்கும், தமிழகத் தேர்தல் என்று வரும்போது, மாநிலக் கட்சி ஒன்றுக்கும், தமிழக மக்கள் ஓட்டளித்து உள்ளனர்.இந்த முறையும், அது தான் மக்களின் முடிவுகளில் வெளிப்படுகிறது. இங்கேயுள்ள மக்கள், காங்கிரசுக்கு ஓட்டளித்துள்ளனர். காங்கிரசையும், ராகுலையும் முன்னிறுத்தியது, தி.மு.க., கூட்டணி. ராகுல் பிரதமராக வருவார் என்று நம்பித் தான், மக்கள், தி.மு.க., கூட்டணிக்கு பெருவாரியாக ஓட்டளித்துள்ளனர்.கடந்த முறை, பா.ஜ.,வை வென்றவர், ஜெயலலிதா. 'மோடியா, லேடியா...' என்று பிரசாரத்தைக் கூர்மைப்படுத்தி, 37 இடங்களையும், அ.தி.மு.க., வென்றது.ஆனால், இம்முறை காட்சி மாறியது. ஜெயலலிதா ஏற்க மறுத்த, பா.ஜ.,வை இன்றைய, அ.தி.மு.க., தங்களின் கூட்டணிக்குள் சேர்த்து, தமிழகம் எங்கும் எடுத்துச் சென்றது. மக்கள், ஜெ., நிலைப்பாட்டை நினைவில் நிறுத்தி, பா.ஜ.,வை நிராகரித்துள்ளனர். கூட்டணியில், அ.தி.மு.க.வும் இருந்ததால், அதற்கும், 'கொலாட்ரல் டேமேஜ்' ஏற்பட்டு விட்டது.இரண்டு முறையும் தமிழக மக்கள், பா.ஜ.,வை நிராகரித்துள்ளனரே, ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலை, பா.ஜ.,வுக்கு மட்டுமல்ல, அதற்கு முன், காங்கிரசுக்கும் ஏற்பட்டுள்ளது. எளிமையான காரணம், தமிழகத்தில், தேசிய கட்சிகள், தம்மை முக்கியமான போட்டியாளராக நிலைநிறுத்தியது கிடையாது என்பது தான். மாநில கட்சிக்கு, அந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்தன.உதாரணமாக, உத்தர பிரதேசத்தில், 1991 வரை, காங்கிரசும், ஜனதா கட்சியுமே மோதி, ஆட்சியைக் கைப்பற்றி வந்தன. அதன்பின், முலாயம் சிங் - மாயாவதி இடையே மட்டுமே போட்டி நிலவி வந்தது. இதை உடைத்தது, பா.ஜ., தான். மாநில அரசியலில் வலுவான கல்யாண் சிங்கையும், ராஜ்நாத் சிங்கையும், பின், யோகி ஆதித்யநாத்தையும் களமிறக்கி, பா.ஜ., வெற்றிகளைக் குவித்தது.இரு துருவ அரசியலில், தமிழகமும், உ.பி.,யைப் போன்றதே. இங்கே தீவிரமாக களமிறங்கி, மக்கள் பணியாற்றத் தொடங்கும்போது தான், பா.ஜ.,வுக்கான வெற்றி வாய்ப்புகள் பெருகும்.

ஆர்.வெங்கடேஷ்
இ-மெயில்: pattamvenkatesh@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN - Vizag,இந்தியா
27-மே-201911:40:59 IST Report Abuse
INDIAN 27 பன்றிகள் ஒன்றாக ஒரு சிங்கத்தை எதிர்த்து அசிங்க பட்டது. எங்க ஊரில் இதே போல் தலைகனம் பிடித்த சந்திரபாபுவை மக்கள் மோசமாக தோற்க்கடித்தார்கள். எங்க தேர்தல் கமிஷன் சரியாக செயல் படவவில்லை? உங்களுக்கு தான் வசக்கறிஞர்கள் உள்ளார்கள் அல்லவே தைரியம் இருந்தால் முறை இடுங்கள். அதை விட்டு விட்டு மோடி மேல் குறை கூறாதே. எங்கள் தலைவர் நாட்டு பற்று உள்ளவர். அவருக்கு கடவுள் மற்றும் மக்கள் ஆசி எப்பவும் உண்டு. பார் இன்னும் கொஞ்ச நாட்களில் காங்கிரஸ் என்னும் நாசகார கட்சி அழிந்துவிடும். ஜெய் ஸ்ரீ ராம்.
Rate this:
Cancel
arunachalam - Tirunelveli,இந்தியா
26-மே-201917:24:18 IST Report Abuse
arunachalam கொள்ளையடிச்சு தன் குடும்பத்தை பணக்காரனாக்கியவனைத்தான், அவன் கட்ச்சியைத்தான் தேர்ந்தெடுப்போம்னு, தமிழகமே திமிர் பிடிச்சு நின்னா, தமிழா தலைல மண்ணை அள்ளிப் போட்டுக்கடா என்றுதான் கூற தோன்றும். நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்க போல.
Rate this:
Cancel
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
26-மே-201910:45:03 IST Report Abuse
Prof. A.Venkateswaran. ஆகச் சிறந்த ஆய்வு . பாராட்டுக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X