பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளை தூர்வாரும் வாலிபர்கள்

Added : மே 26, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 நீர்நிலை, தூர்வாரும் ,வாலிபர்கள்

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், மேலமாத்துார் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள், துார்ந்து போன நீர்நிலைகளை துார் வாரும் பணியில், ஈடுபட்டு உள்ளனர்.

பெரம்பலுார் மாவட்டம், மேலமாத்துார் கிராமத்தில், 12 ஏக்கரில், கல்லுடை குட்டை,
விளாத்திகுளம், பிள்ளையார் குளம் ஆகிய நீர் நிலைகள், அருகருகே உள்ளன. கிராம மக்கள்
மற்றும் கால்நடைகளின் தண்ணீர் தேவையை, இவை பூர்த்தி செய்தன.இந்த நீர் நிலைகளில் இருந்து, அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், தண்ணீர் எடுத்துச் சென்று பயன்படுத்தினர். வீட்டுக்கு வீடு, ஆழ்துளை கிணறுகள் அமைத்ததால், இந்த நீர் நிலைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.

இதனால், இந்த நீர்நிலைகளில், சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து, பராமரிப்பின்றி துார்ந்து போயின. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், 500 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும், தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், மேலமாத்துார் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், கால்நடைகள் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரை பெறுவதற்காகவும், நீர்நிலைகளை துார்வார முடிவு
செய்தனர்.

இதற்காக, 'புதிய பயணம்' என்ற பெயரில், நண்பர்கள் குழு அமைத்து, நிதி திரட்டினர். மனோகரன், முருகானந்தம், விஜயமணி உள்ளிட்ட வாலிபர்கள், இப்பணியில் முழுமையாக ஈடுபட்டனர்.கிராம வாலிபர்கள் திரட்டிய நிதியில், விளாத்திகுளத்தை துார் வாரினர். துார்வாரிய மண்ணில், குளத்தின் கரைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

மேலும், கூடுதலாக நிதி திரட்டி, குளத்தை முழுமையாக துார்வாரி, கரைகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.வாலிபர்களின் பணியை, இக்கிராமத்தினர் மட்டுமின்றி, பக்கத்து கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
26-மே-201917:48:10 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj தூர் வாரும்போது மிகவும் முக்கியமாக கவனிக்கவேண்டியது அந்த குளம் அல்லது ஏரி அல்லது குட்டையில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி நீர் நிலை ஆதாரங்களின் நீளம் அகலம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவேண்டும் ஏதோ அரசியல் கட்சிகள் சில விளம்பரத்திற்காக மேல்போக்காக செய்வது போன்று செய்யக்கூடாது மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளோரில் தெரியாத்தனமாக அப்பாவி ஏமாந்திடட ஏழைகள் அப்பட்டியலில் இருப்பின் அவர்களுக்கு அரசே நல்லதொரு இடத்தில் மாற்று ஏற்பாடு செய்திட வழி வகை கண்டு அவர்கள் எவ்வித பாதிப்பும் அடையாதபடி நல்லதொரு இடமதில் வாழ்விடம் அமைத்து கொடுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Sivak - Chennai,இந்தியா
28-மே-201911:44:15 IST Report Abuse
Sivakஇளைஞர்கள் இந்த மாதிரி சமூக பணிகள் செய்வதே மிகவும் பாராட்ட பட வேண்டிய விஷயம் .. இதில நொள்ளை சொல்லிக்கிட்டு கொய்யால ... நீங்களெல்லாம் என்ன ஜென்மம் ??...
Rate this:
Share this comment
Cancel
Mani Kandan - tanjore,இந்தியா
26-மே-201915:19:02 IST Report Abuse
Mani Kandan வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்வாழ்க வையகம்வாழ்க வையகம்
Rate this:
Share this comment
Cancel
26-மே-201911:03:16 IST Report Abuse
ருத்ரா மகிழ்ச்சி எதர்கால இந்திய தலைவர்கள் பொது நலம் காக்கும் இளைஞர்கள். பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X