பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் பலி கேட்குதா, இச்சாலை?

Added : மே 26, 2019
Advertisement

கோவை:காந்தி மாநகரில் இருந்து கேஸ் குடோன் வழியாக, கணபதி செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.காந்தி மாநகரில் இருந்து கேஸ் குடோன் வழியாக கணபதி செல்லும் சாலையில், தீயணைப்பு அலுவலகம் உட்பட, பள்ளி, கோவில்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. சத்தி ரோடு மற்றும் பீளமேடு செல்ல பிரதான வழி என்பதால், இச்சாலையில், எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும்.இச்சாலை புதுப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இவ்வழியாக செல்லவே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். தெருவிளக்கும் சரிவர எரிவதில்லை. எச்சரிப்பு பலகை, 'ரிப்ளக்டர்' இல்லாததால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.மாநகராட்சி இளம்பொறியாளர் இளங்கோவிடம் கேட்டபோது, ''காந்தி மாநகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர், அசோக் நகர், மணியகாரம்பாளையம் செல்லும் சாலை, 2.45 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. தற்சமயம், அசோக் நகர், நல்லாம்பாளையம் பகுதியில் வேலை நடக்கிறது. ஒரு மாதத்துக்குள் இப்பகுதியில், தார் சாலை அமைக்கும் பணி துவங்கும். விபத்து ஏற்படுவதை தவிர்க்க, 'பேட்ஜ் ஒர்க்' செய்ய நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X