இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், 'அட்வைஸ்'

Added : மே 26, 2019 | கருத்துகள் (73)
Advertisement
இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், 'அட்வைஸ்'

தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றாலும், பலன் ஏதுமில்லாமல், லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டிய நிலை.தமிழகத்திலும், அந்த கட்சியால், ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு, இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

இருந்தாலும், தலை தப்பிய, அ.தி.மு.க., இனிமேல், மத்திய அரசின் தயவில் தான் இருக்க வேண்டும்.இந்நிலையில், தமிழக முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு, பா.ஜ., தரப்பிலிருந்து, பிரதமர் மோடியிடமிருந்து, மீண்டும் மீண்டும் தரப்படும், 'அட்வைஸ்...' ஒன்றாக இருங்கள், தினகரனுடன் ஒன்று சேருங்கள் என்பது தான்.பிரதமரின் இந்த அட்வைசை, பா.ஜ.,வின் தமிழக பொறுப்பாளர், பியுஷ் கோயல், தமிழக முதல்வர், துணை முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
'எந்தவித, 'ஈகோ'வும் பார்க்காமல், தினகரனுடன் சேருங்கள்; அரசியலில் தயக்கத்தோடு செயல்படக்கூடாது; ஒன்று சேர்வதில் ஏதாவது பிரச்னை இருந்தால். நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்' என, பிரதமர் தரப்பிலிருந்து, அ.தி.மு.க., தலைவர்களுக்கு சொல்லப்பட்டு உள்ளது.இப்போது புதிய அரசு அமைப்பதில், பிரதமர் பிசியாக இருப்பதால், விரைவில், இ.பி.எஸ்., - -ஓ.பி.எஸ்.,சை தனியாக சந்தித்து, இந்த விஷயம் குறித்து, பிரதமர் விரிவாக பேசுவார்.

Advertisement


வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
02-ஜூன்-201909:55:52 IST Report Abuse
krish அதிமுக பிஜேபி நலனுக்காக சசி குடும்பம் நட்பு நாடினால், தானாகவே முன்வந்து, தன் தலையில் மண்ணை இறைத்து கொள்ளுவதற்கு சமமான செயல் ஆகும். உறுதியான, மக்கள், தொண்டர் பெருமதிப்பிற்கும், பாசத்திற்கும் நம்பிக்கைக்குரிய ஒற்றை தலைமை, ஆளுமை உடைய ஒரு தலைவனை/ தலைவியை கூடிய விரைவில் அடையாளம் காண வேண்டிய நேரம் இது. காலம் கடந்தால், நஷ்டம் அதிமுகவுக்கே.......
Rate this:
Share this comment
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூன்-201919:12:35 IST Report Abuse
Niranjanஎப்படி இருந்தாலும் அடுத்த தேர்தலுக்குள் அதிமுக காணாமல் போய் விடும் இதில் தினகரனுடன் சேர்ந்தால் என்ன சேராவிட்டால் என்ன...
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
31-மே-201919:50:21 IST Report Abuse
Somiah M தமிழகத்தின் நிலை தெரியாமல் ப ஜ க வினர் ஆலோசனை கூறுகிறார்களோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது .
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
30-மே-201912:45:18 IST Report Abuse
Visu Iyer அம்மா மரணத்தை பற்றி உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறது..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X