அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்தியில் அமைச்சர் பதவி யாருக்கு வாய்ப்பு?

Added : மே 26, 2019
Advertisement
சென்னை, மத்திய அமைச்சர், தேனி வேட்பாளர், ஆதரவு,டில்லி,ராஜ்யசபா,

சென்னை : தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ராஜ்யசபா, எம்.பி.,யாகி அமைச்சர் பதவி பெற, பா.ஜ., தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

துணை முதல்வரின் மகனுக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க., வினர் உள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணி, படுதோல்வியை சந்தித்தது. அ.தி.மு.க., சார்பில், தேனி தொகுதியில் போட்டியிட்ட, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன், ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். பா.ஜ., சார்பில், தேர்தலில் போட்டியிட்ட, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் அனைவரும் தோல்வியை தழுவினர்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் வெற்றி பெற்றார்; அவருக்கு, மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்தது. அ.தி.மு.க., 37 எம்.பி.,க்களை பெற்றும், அமைச்சரவையில் இணையாததால், அமைச்சர் பதவி பெற முடியவில்லை. இதனால், தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இம்முறை, தி.மு.க., கூட்டணி, 37 இடங்களில் வெற்றி பெற்றாலும், மத்தியில், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெற்றதால், தி.மு.க., - எம்.பி.,க்களின், அமைச்சர் கனவு தகர்ந்தது.

அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றுள்ள ரவீந்திரநாத் குமாருக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, பா.ஜ., தலைமையுடன் நெருக்கம் அதிகம் என்பதால், இது சாத்தியம் என்றே கூறப்படுகிறது. ஆனால், அமைச்சர் பதவி பெற, இ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் சம்மதிப்பரா என்பது தெரியவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற, பா.ம.க.,விற்கு, ஒரு ராஜ்யசபா பதவி தர, அ.தி.மு.க., சம்மதம் அளித்திருந்தது.எனவே, தர்மபுரியில் தோல்வி அடைந்த அன்புமணி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், ராஜ்யசபா, எம்.பி.,யாக வாய்ப்புள்ளது.

அதேபோல், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய, பா.ஜ., வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடாத, பா.ஜ., பிரமுகர்கள், தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக, ராஜ்யசபா, எம்.பி.,யாக்கி, அமைச்சர் பதவியை மோடி வழங்குவார் என்ற நம்பிக்கையில், டில்லியில் காய் நகர்த்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X