மகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (42)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: லோக்சபா தேர்தலில்,கட்சி நலனை கருத்தல் கொள்ளாமல், மகன்களுக்கு சீட் கேட்டு சில தலைவர்கள் நெருக்கடி கொடுத்தாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


மகன்களுக்கு சீட்


சமீபத்தில், லோக்சபாவில், 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தனியாக, 303 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, 353 தொகுதிகளிலும் வென்று, பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைகிறது.இந்தத் தேர்தலிலும், மிகவும் மோசமான படுதோல்வியை, காங்கிரஸ் சந்தித்துள்ளது. இது குறித்து ஆராய்வதற் காக, காங்கிரஸ் உயர் மட்டஅமைப்பான, செயற்குழு கூட்டம், நேற்று டில்லியில் கூடியது.

இந்த கூட்டத்தில் பேசிய ஜோதிராதித்யா சிந்தியா, உள்ளூரில் வலிமையான தலைவர்களை காங்கிரஸ் உருவாக்க வேண்டும் என்றார்.

அப்போது ராகுல் குறுக்கிட்டு கூறியதாக வெளியான தகவல்: காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் கட்சி மோசமாக செயல்பட்டது. சீட் கொடுக்க முடியாது என தெரிவித்தும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ஆகியோர் தங்களது மகன்களுக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். பிரசாரத்தின் போது பா.ஜ., மற்றும் மோடிக்கு எதிராக நான் எழுப்பிய பிரச்னைகளை காங்கிரஸ் தலைவர்கள் முன்னெடுத்து செல்லவில்லை எனக்கூறியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.






பிரியங்கா பேசும்போது, ராகுல் பதவி விலகினால்,பா.ஜ.,வின் சூழ்ச்சியில் சிக்கிவிடுவார் எனக்கூறினார்.

அக்கட்சி மூத்த தலைவர் ஒருவர்,ராகுல் பதவி விலகினால், தொண்டர்கள் தற்கொலைசெய்து கொள்வார்கள் என தெரிவித்தார்.


ராஜினாமா நிராகரிப்பு:


கூட்டத்தில் பேசிய ராகுல், லோக்சபா தேர்தலில் காங்., கட்சி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறினார். ஆனால் அவருடைய ராஜினாமா கோரிக்கை கமிட்டியினரால் நிராகரிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-மே-201918:54:51 IST Report Abuse
Bhaskaran சிதம்பரம் நாக்கை பிடுங்கிக்குவாரா ,அவரை மாதிரி பெரியமானஸ்தன் உலகத்தில் கிடையாது அந்த நல்லகாரியமெல்லாம் செய்யமாட்டார்
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
26-மே-201915:32:02 IST Report Abuse
அம்பி ஐயர் இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்....
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
26-மே-201914:50:27 IST Report Abuse
sundarsvpr கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X