அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே பெயரில் வேட்பாளர்கள்; தெளிவாக ஓட்டளித்த மக்கள்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (16)
Advertisement
சென்னை, லோக்சபா, மக்கள், ஓட்டு, வேட்பாளர்கள், விழிப்புணர்வு,

சென்னை : ஒரே பெயரில் பலர் போட்டியிட்டாலும் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் மக்கள் ெதளிவாக இருப்பதை இந்த தேர்தல் உணர்த்தி உள்ளது.
பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு எழுத்தறிவு இல்லாதபோது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயர் உடைய வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் களம் இறக்குவது வழக்கம். அது இந்த தேர்தலிலும் தொடர்ந்தது. லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு போட்டியாக அதே பெயரிலான வேட்பாளர்களை சுயேச்சையாக களம் இறக்கினர். தி.மு.க. - அ.தி.மு.க. இரு தரப்பிலும் இது செய்யப்பட்டது. இருப்பினும் அ.ம. மு.க. வேட்பாளர்கள் பெயரில் கூடுதல் ஆட்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் தங்களின் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என அ.ம.மு.க.வினர் புலம்பினர்.

ஆனால் மக்கள் யாருக்கு ஓட்டளிக்க விரும்பினரோ அவர்களுக்கு சரியாக ஒட்டளித்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. அரக்கோணம் தொகுதியில் பா.ம.க. சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிட்டார். அவர் 3.43 லட்சம் ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட மூர்த்தி 3499 ஓட்டுகளை பெற்றுள்ளார். காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் 3.97 லட்சம் ஓட்டுகள் பெற்ற நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட மரகதம் 1,640 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். கோவையில் பா.ஜ. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 3.92 லட்சம் ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட இரண்டு ராதாகிருஷ்ணன்கள் முறையே 2633; 1627 ஓட்டுகள் பெற்றனர். அதே தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் 5.71 லட்சம் ஓட்டுகள் பெற்றார்;



அதே பெயரிலான சுயேச்சை நடராஜன் 1,370 ஓட்டுகள் பெற்றார். ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி 5.63 லட்சம் ஓட்டுகளும், சுயேச்சை கணேசமூர்த்தி 1,539 ஓட்டுகளும் பெற்றனர்.தென்காசி தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் பொன்னுத்தாய் 92 ஆயிரத்து 216 ஓட்டுகள் பெற்றார். அதே பெயரிலான மூன்று பொன்னுத்தாய்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். அவர்கள் முறையே 4733, 2427, 1129 ஓட்டுகளை பெற்றனர். திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை 6.66 லட்சம் ஓட்டுகள் பெற்றார். அதே தொகுதியில் அண்ணாதுரை பெயர் கொண்ட மூவர் சுயேச்சைகளாக களம் இறங்கினர்.

அவர்கள் முறையே 1206 937 848 ஓட்டுகளை மட்டும் பெற்றனர். அதே தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3.62 லட்சம் ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி 4175 ஓட்டுகளை பெற்றார். திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர் காமராஜ் 19 ஆயிரத்து 133 ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட காமராஜ் பெயரை கொண்ட இருவர் முறையே 206, 110 ஓட்டுகளை பெற்றனர்.இவ்வாறு அனைத்து தொகுதிகளிலும் முக்கிய வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளைப் பெற அவர்கள் பெயரில் சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளர்கள் மிகக் குறைந்த ஓட்டுகளையே பெற்றனர்.

ஒரே பெயரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் மக்கள் தாங்கள் ஓட்டளிக்க விரும்பும் நபருக்கு சரியாக ஓட்டளிக்கின்றனர் என்பது இதன் வாயிலாக நிரூபணமாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jegan Nicholas - Tirunelveli,இந்தியா
26-மே-201913:39:43 IST Report Abuse
Jegan Nicholas பெயரை பார்த்து யாரும் வாக்களிப்பது இல்லை . சின்னத்தை பார்த்துதான் வாக்களிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-மே-201911:08:32 IST Report Abuse
தமிழ்வேல் பெயரைப்பார்த்துப் போடுபவர்களைவிட சின்னத்தைப்பார்த்து ஓட்டுப் போடுபவர்கள் அதிகம் என்று புலனாகின்றது.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
26-மே-201911:05:46 IST Report Abuse
 N.Purushothaman உச்சநீதிமன்ற தீர்ப்பு படி VVPAT இயந்திரத்தில் எண்ணப்பட்ட ஓட்டுக்கள் 100 % வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுடன் பொருந்தி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளதை ஏன் எந்த மீடியாக்களும் இதுவரை வெளியிடவில்லை ?
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
26-மே-201915:11:19 IST Report Abuse
Yaro Oruvanஅதையெல்லாம் வெளியிட மாட்டானுவ.. எங்கயாவது ஒரு சந்துக்குள்ள சூட்கேஸ் வச்சிக்கினு யாராவது ஓடுனா ஒடனே EVM மெஷினை கடத்தி ஆளுங்கட்சி அரசியல்வாதி ஓட்டம்னு அள்ளிவிடுவானுவ.....
Rate this:
Share this comment
Suppan - Mumbai,இந்தியா
26-மே-201915:42:09 IST Report Abuse
Suppanதிரும்பவும் இ வி எம் பிரச்சினையைக் கிளப்பினால் திமுகவிற்கு பாதகம் இருந்தும் ஒரு தேர்தலில் வென்ற திமுக ஆசாமி ஒரு வீடியோவில் ம பி, ராஜஸ்தான், சத்தீஸ்கட் போன்ற மாநிலங்களில் இ வி எம் தவறு என்று பேசி இருக்கிறார். அதை நிரூபிக்க வக்கு இல்லை. திருட்டு புத்தி போகாது என்றும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X