ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை

Added : மே 26, 2019 | கருத்துகள் (24)
Advertisement
ராஜ்யசபா, புதுடில்லி, தே.ஜ கூட்டணி,எம்.பிக்கள், பெரும்பான்மை,மசோதா

புதுடில்லி, -லோக்சபாவில் பெரும்பான்மை பெற்றுள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, ராஜ்யசபாவில், அடுத்த ஆண்டு இறுதியில், பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலிலும், தே.ஜ., கூட்டணி, 336 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது. ஆனால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், மத்திய அரசால், பல மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.மேலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா பல நாட்கள் முடங்கியது. நிலம் கையப்படுத்தும் மசோதா, முத்தலாக் தடை மசோதா உட்பட பல மசோதாக்கள், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், அரசால், இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.லோக்சபா, எம்.பி.,க்கள், மக்களால் நேரிடையாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், ராஜ்யசபா, எம்.பி.,க்கள், எம்.எல்,ஏ.,க்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.அதனால், எந்த கட்சிக்கு அதிக, எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனரோ, அந்த கட்சிக்கு, ராஜ்யசபாவுக்கு அதிக, எம்.பி.,க்களை அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும்.கடந்த ஆண்டு, ராஜ்யசபாவில், காங்கிரசை விட, அதிகமா,ன எம்.பி.,க்கள் பலத்தை, தே.ஜ., கூட்டணி முதல்முறையாக பெற்றது.

இப்போது, தே.ஜ., கூட்டணிக்கு, 101 எம்.பி.,க்கள் உள்ளனர். மேலும், மூன்று சுயேச்சை, எம்.பி.,க்கள் மற்றும் மூன்று நியமன, எம்.பி.,க்கள் ஆதரவு, தே.ஜ., கூட்டணிக்கு உள்ளது. மத்தியில், ஐ.மு., கூட்டணி அரசு இருந்த போது, நியமன, எம்.பி., யாக நியமிக்கப்பட்ட கே.டி. துள்சியின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் முடிகிறது. அதன் பின், ஒரு நியமன, எம்.பி.,யை, மத்திய அரசு நியமிக்கலாம்.அடுத்த ஆண்டு, நவம்பருக்குள், தே.ஜ., கூட்டணிக்கு, உத்தர பிரதேசம், பீஹார், தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட, 14 மாநிலங்களிலிருந்து , 19 எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதனால், அடுத்த ஆண்டு இறுதியில், ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெற, தே.ஜ., கூட்டணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.எனவே, மீதியுள்ள நான்கு ஆண்டு கால ஆட்சியில், அனைத்து மசோதாக்களையும், எந்த வித தடையும் இன்றி, அரசால் நிறைவேற்ற முடியும். 'ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெற்ற பின், பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள, பிரதமர் மோடி முயற்சிப்பார்' என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பான்மை போதாது பார்லிமென்ட் விவகாரத்துறை முன்னாள் செயலர், அப்சல் அமனுல்லா கூறியதாவது: ராஜ்யசபாவில், ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருந்தால் மட்டும், சபை சுமூகமாக நடக்கும் என்பது உறுதியில்லை.எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக அமளியில் ஈடுபட்டால்தான், சபை நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதிலை. கடந்த ஆண்டுகளில், ஆறு அல்லது ஏழு எம்.பி.,க்கள், ஒரு குழுவாக செயல்பட்டு, சபை நடவடிக்கைளை தடுத்துள்ளனர்.

பெரும்பான்மை பலம் இருந்தாலும், அவையில் சிலரின் அமளியால், மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.சபை நடவடிக்கைகள் பாதிக்க கூடாது என்ற எண்ணம், அனைத்து உறுப்பினர்களிடமும் ஏற்பட வேண்டும்.அப்போது தான், சபை முழுமையாக நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மே-201917:59:12 IST Report Abuse
Krishnamurthy Venkata Rathinam dissolve
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-மே-201916:37:05 IST Report Abuse
Endrum Indian இனிமேல் பார்லிமென்ட் அந்த தடை இந்த தடை என்று ஏதேனும் ஒரு கட்சி செய்தால் அந்த கட்சியை உடனே (பல தடவை இதவரை எச்சரிக்கை செய்தாகி விட்டது, போதும் இனிமேல் அப்படி வேண்டாம்.) 5 வருடத்திற்கு தேர்தலில் பங்கு கொள்ள தடை, அதையும் மீறி பார்லிமென்ட் செயல் படுவதை மறுபடியும் நிப்பாட்டினால் அந்த கட்சியை அடுத்த 20 வருடத்திற்கு தேர்தலில் நிற்க தடை செய்ய வேண்டும். அப்போது பார்க்கணுமே எல்லா கட்சிகளும் Problem Oriented ஆக இல்லாமல் Solution Orineted ஆக இருப்பார்கள். இது thaan ஒரே வழி. பார்லிமென்ட் செல்வது பார்லிமென்டை நடத்த, வேலைக்கு செல்வது வேலை செய்ய, டைனிங் டேபிளில் உட்காருவது திங்க இப்படி இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
26-மே-201915:52:21 IST Report Abuse
V Gopalan They draw salary plus perks and if they are not interested to serve for the public, why not the BJP Govt bring a bill to dissolve the Rajya Sabha. After all the electorates/general public are watching the performance of LS Members whereas these RS Members are being elected by the representatives of general public who are directly elected. Hence the RS is a white elephant. Gone are the days the RS Members are from eminent persons in their fields whereas now only party/ties affiliated and never allow to conduct the business in RS irrespective of any National or Regional party/ties, hence it is better to dissolve the RS once and for all so as to save considerable tax payers money.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X