அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் கட்சிக்கு 3வது இடம்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (59)
Advertisement
சென்னை, ம.நீ.ம, கமல், வரவேற்பு, தினகரன், நாம் தமிழர்

சென்னை : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சென்னை தொகுதிகளில், மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு, கணிசமான ஓட்டுகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தேசிய கட்சிகளுக்கும் இங்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் மாற்று கட்சி வேண்டும் என பலரும் நினைக்கின்றார்கள். இந்த லோக்சபாவில் ம.நீ.ம நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தினகரனின், அ.ம.மு.க., கட்சி, பின்னடைவை சந்தித்துள்ளது. மக்கள் நீதி மையம் கட்சிக்கு, வடசென்னையில், 1 லட்சத்து, 2 ஆயிரத்து, 980 ஓட்டுகள்; மத்திய சென்னையில், 92 ஆயிரத்து, 249 ஓட்டுகள்; தென் சென்னையில், 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 465 ஓட்டுகள் என, 3 லட்சத்து, 30 ஆயிரத்து, 694 ஓட்டுகள் கிடைத்து உள்ளன. இதன் வாயிலாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தை, மக்கள் நீதி மையம்பெற்றுள்ளது.

பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், 20 ஆயிரத்து, 508 ஓட்டுகளை, கமல் கட்சி பெற்றுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கும், கணிசமான ஓட்டுகள் கிடைத்துள்ளன. அக்கட்சிக்கு, வடசென்னையில், 30 ஆயிரத்து, 886 ஓட்டுகள்; மத்திய சென்னையில், 50 ஆயிரத்து, 222 ஓட்டுகள்; தென்சென்னையில், 60 ஆயிரத்து, 515 ஓட்டுகள் என, 1 லட்சத்து, 41 ஆயிரத்து, 623 ஓட்டுகள்கிடைத்துள்ளன.அ.ம.மு.க.,வை காட்டிலும், அதிகப்படியான ஓட்டுகளை பெற்று, சென்னை மாவட்டத்தில், நான்காம் இடத்தில், நாம் தமிழர் கட்சி உள்ளது.பெரம்பூர் எம்.எல்.ஏ.,வாக இருந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, அ.ம.மு.க., வேட்பாளர் வெற்றிவேல், 6 ஆயிரத்து, 274 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
27-மே-201907:09:10 IST Report Abuse
Subramanian Arunachalam மிக மிக நல்லது . தங்களுடைய ஒப்பற்ற தலைமையின் கீழ் இந்த கட்சி பத்தாவது இடத்தை நிச்சியம் பிடிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-201904:52:17 IST Report Abuse
Mani niraya saththamaa irukkeee... pugaiyudhaaaa?
Rate this:
Share this comment
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
26-மே-201918:18:57 IST Report Abuse
K.GOPINATHRAJA கொள்கை என்னவென்று தெரியாத மையத்துக்கு வாக்களித்தவர்கள் பரவாயில்லை . கார்பொரேட் கொள்ளையர்களுக்கும் ரவுடிகளுக்கும் வாக்களித்த திராவிட சிங்கங்களை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X