மலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்

Added : மே 26, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மலேசிய, விமானம், இயந்திர கோளாறு, கோலாலம்பூர்,கட்டுப்பாட்டு அறை, தரையிறக்கம், விமானி

சென்னை : மலேஷியா செல்லும் விமானத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து, நேற்று பகல், 11:50 மணிக்கு, மலேஷிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும், மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், 256 பயணியருடன் புறப்பட்டது. விமானம் பறக்கத் துவங்கிய சில நிமிடங்களில், விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி உணர்ந்தார்.சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,யை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.ஏ.டி.சி., அனுமதி அளித்ததை அடுத்து, அந்த விமானம், பகல், 12:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்திலேயே, தரையிறக்கப்பட்டது. விமான நிலைய ஓய்வு அறையில், பயணியர் தங்க வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில், பைலட், இயந்திரக் கோளாறை கண்டறிந்ததால், 256 பயணியர் தப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
26-மே-201908:33:27 IST Report Abuse
Abdul Rahman Better avoid Malaysian Airlines
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
26-மே-201908:19:15 IST Report Abuse
Pannadai Pandian இதுவே ஏர் இந்தியா நிறுவனமாக இருந்திருந்தால் "ஆழ்மையான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறியிருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X