ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி பார் ஓனர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி பார் ஓனர் பலி

Added : மே 26, 2019

பென்னாகரம்: புதுச்சேரி மாநிலம், ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மகன் விஸ்வநாதன், 30. இவர், இன்ஜினீயரிங் படித்துவிட்டு, தனியார் மதுபானக்கடை பார் நடத்தி வந்தார். இவர், நேற்று தனது நண்பர்கள் ஐந்து பேருடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்துள்ளார். ஆலாம்பாடி அருகே, நீலகிரி பிளேட் பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் ஆற்றில் மூழ்கி பலியானார். தகவலின்படி, ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடம் விரைந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நண்பர்கள் புகாரின்படி, ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு, செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X