சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி தலையில் கல்லை போட்ட தொழிலாளி கைது

Added : மே 26, 2019
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே, குடும்ப தகராறில் மனைவி தலை மீது கல்லை போட்ட தொழிலாளியை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மேலுமலை அருகே உள்ள சாமல்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அகமத் பாஷா, 49. கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவுசியா, 39. இவர்களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடால், தகராறு ஏற்படும். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, தனது மனைவி கவுசியா வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, கல்லை எடுத்து வந்த அகமத் பாஷா, மனைவி தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த கவுசியா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நிலைமை மோசமாக இருந்ததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அகமத் பாஷாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X