பொது செய்தி

தமிழ்நாடு

நேபாளில் சர்வதேச தடகள போட்டி: பங்கேற்க பணமின்றி தவிக்கும் மாணவர்

Added : மே 26, 2019
Advertisement

நாமக்கல்: நேபாளத்தில் நடக்கும், சர்வதேச தடகள விளையாட்டில், ஈட்டி எரியும் போட்டியில் பங்கேற்று, சாதனை படைக்க துடிக்கும் மாணவருக்கு, வறுமை தடையாக உள்ளது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் கண்ணன். தறித்தொழிலாளியான அவருக்கு, செல்வி என்ற மனைவியும், ராஜாராம், 20, சிபி சக்கரவர்த்தி, 18 என, இரண்டு மகன்களும் உள்ளனர்.


ராஜாராம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில், பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிபி சக்கரவர்த்தி, சேலம், தனியார் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ், முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள ராஜாராம், கல்லூரி அளவிலான கோகோ போட்டியில் வெற்றி பெற்று வருகிறார். தனி நபர் போட்டியான ஈட்டி எரியும் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். அவர், மாநில மற்றும் தேசிய போட்டிகளில் முதலிடம் பிடித்துள்ளார். வரும், ஜூன், 15ல், சர்வதேச போட்டி நேபாளில் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்கு, பணம் தடையாக இருப்பதால், என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.

இதுகுறித்து, ராஜாராம் கூறியதாவது: சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தேன். கல்லூரியில் சேர்ந்தபின், கோகோ போட்டியில் சேர்ந்தேன். அதில், குழுவாக இணைந்து, மாநில, தேசிய போட்டியில் வெற்றி பெற்றோம். அதேபோல், ஈட்டி எரியும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். வரும், 15ல், நேபாளில் நடக்கும் சர்வதேச தடகள விளையாட்டில், ஈட்டி எரியும் போட்டியில் கலந்து கொள்கிறேன். அதற்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். என் தந்தை, தறித்தொழிலாளியாக பணியாற்றி, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு, குடும்பத்தை கவனிப்பதுடன், எங்களையும் படிக்க வைக்கிறார். நான், அவ்வப்போது, சிறு சிறு வேலைக்கு சென்று கணிசமாக வருவாய் ஈட்டி, தந்தைக்கு துணையாக இருக்கிறேன். சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு, சாதனை படைக்க வேண்டும் என்பது என் கனவு. இவ்வாறு, அவர் கூறினார். சாதனை படைக்க துடிக்கும் மாணவருக்கு, உதவ முன் வருபர்கள், 63691 63138 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X