முதுகலை ஆசிரியர் காலி பணியிடம்: அரசு பள்ளிகளில் விபரம் சேகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுகலை ஆசிரியர் காலி பணியிடம்: அரசு பள்ளிகளில் விபரம் சேகரிப்பு

Added : மே 26, 2019

சேலம்: அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஜூன், 1 நிலவரப்படி, காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிட விபரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் நாள், கல்வியாண்டின் இடையில் வரும்பட்சத்தில், மே, 31 வரை பணிபுரிய நீட்டிப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, மே, 31ல், 2,000க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெறுகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 என, இரு வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பின், தேர்ச்சி விகிதம் பாதிக்கும் என்பதால், அவற்றை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்காக, அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஜூன், 1 நிலவரப்படி, காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிட விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X