பொது செய்தி

தமிழ்நாடு

'ஓட்டுகளை விற்கும் கலாசாரத்துக்கு மக்கள் சாவுமணி அடித்துள்ளனர்'

Added : மே 26, 2019 | கருத்துகள் (1)
Advertisement

வேலூர்: ''ஓட்டுகளை விற்கும் கலாசாரத்துக்கு இந்த தேர்தலில் மக்கள் சாவுமணி அடித்துள்ளனர்,'' என, விவசாயிகள் சங்க, மாநில தலைவர் பாலு கூறினார்.
இது குறித்து நேற்று அவர், வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: எட்டு வழி சாலை திட்டத்துக்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கும் கலாசாரத்துக்கு, இந்த தேர்தலில் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பணத்தை கொடுத்து போட்டியிட்ட வேட்பாளர்கள், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர். வரும் தேர்தலில் பணம் வாங்காமல், இதேபோல பொதுமக்கள் ஓட்டு போட வேண்டும். உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம், வேலூரில் ஜூலை, 5ல் நடக்கிறது. இதில், 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கண்ணைய நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகராஜன். கரூர் வழக்கமாக இரண்டு கூட்டணிகள் பணம் கொடுக்கும். இம்முறை மூன்று கட்சிகள் தமிழகம் முழுதும். இவர் சொல்வது உண்மை எனில் சீமான் அல்லது கமல் ஹாசன் ஜெயித்துருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X