பொது செய்தி

இந்தியா

மாஜி போலீஸ் கமிஷனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

Added : மே 26, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சி.பி.ஐ., அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியுள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு
லுக் அவுட், ராஜிவ்குமார், விமானநிலையங்கள் உஷார்

கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சி.பி.ஐ., அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இந்நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜீவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டில் தனக்கு முன்ஜாமின் கோரி ராஜிவ்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதன் பின்னர், சி.பி.ஐ., சார்பில் ராஜிவ்குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பெறப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் எந்தப்பகுதி வழியாக வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச்செல்ல முயன்றாலும் அவரை கைது செய்யலாம்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
26-மே-201920:19:03 IST Report Abuse
Indhuindian Senior most IPS officer absconding and going under ground- This can happen only in Didi's State. Probably he is safely hiding in Didi's residence
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
26-மே-201919:01:12 IST Report Abuse
Tamilan அரசியல் சட்டத்தில் உள்ளவர்களின் லச்சனம் இவ்வளவுதான் ஒரு டி ஜி பி கே லுக் அவுட் நோடீசு .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-மே-201918:06:15 IST Report Abuse
Endrum Indian இதெல்லாம் அனாவசியம், தவறு என்று தெரிந்தால் எவனோ இருந்தாலும் விசாரணை ஒரு நாள்,தீர்ப்பு இரண்டாம் நாள் தண்டனை அதிலிருந்து ஒரு மணி நேரத்தில் என்று இருக்கவேண்டும். அப்போது தான் தீர்ப்பு மகத்துவம் உள்ளதாக இருக்கும். இப்போ இருப்பது விசாரனை, விசாரணை, விசாரணை, தீர்ப்பு ஒத்தி வைப்பு, சாட்சிகள் இல்லை ஆகவே விடுதலை??? இதெல்லாம் ஒரு பைசா லாபம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X