காட்டு யானை மிதித்து முதியவர் பலி ; மக்கள் பீதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு யானை மிதித்து முதியவர் பலி ; மக்கள் பீதி

Added : மே 26, 2019 | கருத்துகள் (1)
Share

பொள்ளாச்சி ; கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் முதியவரை யானை மிதித்து கொன்றது. 2 தினங்கள் முன்பு சிறுமி ஒன்று யானை தாக்கி இறந்த நிலையில் தற்போது முதியவரும் பலியாகி இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி, ஆனைமலையை அடுத்துள்ள நவமலையில் நேற்று (மே 25) நள்ளிரவு ஒரு மணியளவில், வீட்டுக்கு வெளியே வந்த முதியவர் மாகாளி, 55 என்பவரை, வீட்டுக்கு முன்னர் நின்றுகொண்டருந்த யானை மிதித்து கொன்றது. கடந்த 2 தினங்கள் முன்பு இதே போல ரஞ்சனா என்ற 7 வயது சிறுமியும் யானை தாக்குதலில் பலியானார்.

அடுத்தடுத்து யானை தாக்குதலில் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், நவமலை பழங்குடி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நவமலைக்கு ஆறுதல் கூறவந்த வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி (அ.தி.மு.க.,) ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம், வால்பாறை டி.எஸ்.பி.,விவேகாநந்தன் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் மாரிமுத்து ஆகியோர் வந்தனர்.

அவர்களிடம் மக்கள் வனவிலங்கு தாக்குதல்களை கண்டுகொள்ளாத வனத்துறை குறித்து மக்கள் ஆவேசப்பட்டனர். பின்னர், நவமலையில் உள்ள 40 வீடுகளில் குடியிருந்த மக்களை, அருகிலுள்ள மின்வாரிய குடியிருப்புகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். முதியவர் மாகாளி குடும்பத்திற்கு 50 ஆயிரம் அரசு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X