அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., பதவி நாளை ராஜினாமா : வசந்தகுமார்

Added : மே 26, 2019 | கருத்துகள் (22)
Advertisement

சென்னை : கன்னியாகுமரி எம்.பி., பதவியை தக்கவைத்துக்கொண்டு, நாங்குநேரி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார் கூறுகையில்,' நாளை நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். சபாநாயகர் நேரம் ஒதுக்கி கொடுத்த உடன் ராஜினாமா செய்வேன். கன்னியாகுமரி எம்.பி., பதவியை தக்கவைத்து கொள்வேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swis Bank Chowkidar - Chennai,இந்தியா
27-மே-201901:02:28 IST Report Abuse
Swis Bank Chowkidar தேர்தல் ஆணையம் விதி முறைகளை மாற்ற வேண்டும். அனாவசியமாக மக்கள் வரி பணம் செலவாகிறது. 1 - எம் எல் ஏ பதவியில் இருப்பவர்கள் எம் பி க்கு போட்டியிட தடை விதிக்க வேண்டும் 2 - ஒரு வேட்பாளர் இரண்டு இடங்களில் போட்டியிடுவது தடை செய்ய வேண்டும். 3 - கிரிமினல் குற்ற பின்னணி உள்ளவர்கள் நிற்க தடை 4 - டெபாசிட் தொகையை அதிகரிக்க வேண்டும். 5 - ஜெயித்த வேட்பாளர் கட்சி விட்டு கட்சி தாவுவது தடை விதிக்க வேண்டும் 6 - இடை தேர்தலை தடை செய்ய வேண்டும் அதற்கு பதிலாக அந்த தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியின் சார்பாக ஒருவரை நியமிக்கலாம். (ராஜ்யசபா உறுப்பினர் மாதிரி)
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-மே-201918:49:38 IST Report Abuse
மலரின் மகள் சட்டமன்றத்திலோ அல்லது பாராளு மன்றத்திலோ உறுப்பினராக இருக்கும் ஒருவர் அந்த சேவை நிறைவு செய்யாமல் தேர்தலில் போட்டி இட அனுமதி தரக்கூடாது. சட்டமன்றத்தில் பிரதிநிதியாக மக்கள் குறைகளை பற்றி பேசி தொகுதி மக்களுக்கு அவர்கள் சார்பாக இருப்பேன் என்று சத்திய பிரமாணம் செய்து விட்டு பாதியிலேயே விட்டு செல்வது தார்மீக அடிப்படியில் சரியல்ல அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-மே-201918:47:43 IST Report Abuse
மலரின் மகள் இவர் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியை கேட்டேன். எளிய வாக்கியங்களை கூட பிறமொழி கலப்பில்லாமல் சில வினாடிகள் கூட பேச தெரியவில்லையே என்று வருத்தம் தான் வருகிறது. சபாநாயகர் available ஆக இருந்தால் நாளையே ராஜினாமா செய்வாராம். சரி தமிழ் தான் சரியாக பேசவில்லை என்று விட்டு விட்டாலும் பேசுகின்ற வார்த்தைகளை கூட சரியாக பேசத்தெரியவில்லை. சட்டமன்றத்தை ராஜினாமா செய்வேன் என்கிறார். அது எப்படி இவரால் முடியும். சட்டமன்றத்தை ராஜினாமா செய்ய போகிறீர்களா என்று எதிர் கேள்வி கேட்கவில்லை. நிருபர்களாக புரிந்து கொண்டார்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று. தெளிவில்லாமல் பேசுவோர் எப்படி பாராளுமன்றத்தில் நாட்டின் சட்டங்களை இயற்ற இருக்கும் இடத்தில் உறுப்பினர்களாக இருந்து சேவை செய்ய போகிறார்களோ? சுத்தமாக, தெளிவாக தமிழில் பேசுவோருக்கு மட்டுமே வாக்குகளை இனி தரவேண்டும் என்று வாக்காளர்கள் இவர்களிடம் நேரடியாக கூறவேண்டும் போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X