பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் -6 ல் கேரளாவில் பருவமழை துவக்கம்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019
Advertisement
பருவமழை, கேரளா, வெப்பச்சலனம், மிதமான மழை

சென்னை : அடுத்த மூன்று நாட்களுக்கு, தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கூறுகையில்,''ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டங்களான நீலகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூரில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அந்தமானில் தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களில் கேரளா நோக்கி நகர்ந்து ஜூன் 6ஆம் தேதி மழை தொடங்கும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உள்ளிட்ட இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் பதிவாகும்,'' என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X