தேர்தல் தோல்வி:சாப்பிட மறுத்த லாலு

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (35)
Advertisement
லாலு, சிறை, அடம்,

ராஞ்சி : பீகாரில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியால், லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்று நாள் முழுவதும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உணவு சாப்பிட மறுத்து கவலையோடு இருந்ததாக, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


சிறை சிகிச்சை :


ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்காக அவர் சிறையிலிருந்து பரோல் கேட்டும் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தை நாடியும் பயனளிக்கவில்லை. பின், உடல் நலமின்றி ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், சிறையில் இருந்தபடியே தன் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவுக்கும், ஆர்ஜேடி தொண்டர்களுக்கும் கடிதம் எழுதி உற்சாகப்படுத்தி வந்தார். தேர்தலில் சிறப்பான வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வந்தார்.


பெரும் தோல்வி :


ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆர்ஜேடி பீகாரில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. கூட்டணி கட்சியான காங்கிரஸ் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், பா.ஜ., ஐக்கிய ஜனதா தள கூட்டணி 39 ஐ கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, நிலவரங்களை கவனித்து வந்த லாலுபிரசாத், வழக்கமான அவரது உணவை சாப்பிட மறுத்தார் என்று ராஞ்சி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


அடம் பிடித்த லாலு :


லாலுவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பிரசாத் கூறுகையில், '' லாலுவின் அன்றைய உணவை பெரும்பாலும் அவர் ஒதுக்கி விட்டார். ஆனால், நாங்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளிப்பதையும், இன்சுலின் ஊசி செலுத்துவதையும் குறிப்பிட்டு, தேவையான உணவை எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினோம்,'' என்றார்.

லோக்சபா தேர்தலில், அபார வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது மோடி தலைமையிலான பா.ஜ., வும், தேசிய ஜனநாயக கூட்டணியும். ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நடந்து முடிந்த தேர்தல் பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்துள்ளது என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-மே-201915:04:54 IST Report Abuse
இந்தியன் kumar ஊழல் செய்து தண்டனை பெற்றாலும் இவர்கள் திருந்தவே மாட்டார்களா என்ன ???
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி இந்தியாவிலேயே மானம் ரோஷம் உள்ள ஒரே தலைவர். அவரது கஷ்டம் சொல்ல முடியாதது. ராஹுலைப் பாருங்கள் மம்தாவை பாருங்கள். கொஞ்சம் சுதாரித்து மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விட்டனர். இன்னும் சில நாட்களில் மோடி துவேஷத்தை புதுப்பிப்பார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
Rate this:
Share this comment
Cancel
27-மே-201908:17:09 IST Report Abuse
மதுவந்தி இதுதான் நடக்கும் என்று தெரிந்தும் உண்ண மறுப்பது செயற்கையான பிடிவாதம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X