தொண்டர் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (30+ 74)
Advertisement
ஸ்மிருதி இரானி, பா.ஜ., தொண்டர், கொலை, அமேதி

அமேதி : மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பா.ஜ., தொண்டரும், தனது நெருங்கிய உதவியாளருமான சுரேந்தர் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அமேதி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்மிருதி இரானி, அவரது உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.
அமேதி தொகுதியை சேர்ந்த சுரேந்தர் சிங், ஸ்மிருதி இரானிக்காக பிரசாரம் செய்து வந்தவர். பர்லியா கிராமத்தில் பா.ஜ.,வின் தேர்தல் வெற்றியை கொண்டாடிய அவரை மர்ம நபர்கள் சிலர் நேற்று (மே 25) நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சுரேந்தர் சிங், லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுரேந்தர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த ஸ்மிருதி இரானி, அமேதி விரைந்தார். அங்கு சுரேந்தரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, சுரேந்தரின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.
சுரேந்தரின் கொலைக்கு காங்., தான் காரணம் எனவும், பா.ஜ.,வின் வெற்றியை கொண்டாடியதாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சுரேந்தரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி,''யார் சுட்டது, யார் சுடச்சொன்னது என்பதை கண்டுபிடித்து அந்த குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை கூட வாங்கித்தருவேன். அதற்காக, நாங்கள் கோர்ட் கதவுகளை தட்டுவோம்,'' என்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (30+ 74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சென்னை பாலன் - Chennai,இந்தியா
27-மே-201903:09:00 IST Report Abuse
சென்னை பாலன் செத்தாங்க , ஸ்மிதி இரானியின் சபதம் , இவர்களை குழிதோண்டி புதைக்கப்போகிறது .
Rate this:
Share this comment
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
27-மே-201902:52:58 IST Report Abuse
sankar இத்தாலி மாஃபியாக்கள் .... இப்படித்தான் செய்வார்கள்.... அதன் வழக்கம் இப்போது இந்தியாவிலும் துளிர் விடுகிறது
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
27-மே-201900:46:46 IST Report Abuse
கைப்புள்ள மோடி எதிர்ப்பு என்ற பெயரில் வெறுப்பை காக்கும் வெறியர்களே நாளைக்கே உங்க சைடுலயும் இது போல நடந்தால் அப்போவும் இதே போலதான் நடிப்பு, சந்தேகம் என்று விஷத்தை கக்குவீர்களா இல்லை ஒப்பாரி வைப்பீர்களா? மிக முக்கியமாக அப்போவாச்சும் திருந்துவார்களா? ஏன் உங்க சைடுல எல்லாம் உதவியாளர்கள் இல்லையா? உங்களுடைய மோடி வெறி தீரணும்னா இந்த லெவலுக்கு போய்தான் ஆகணுமா? மோடி எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடாதீர்கள், அது மிகவும் தவறு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X