மோடிக்கு இம்ரான்கான் போனில் வாழ்த்து

Added : மே 26, 2019 | கருத்துகள் (7)
Advertisement
இம்ரான், பாகிஸ்தான், பதற்றம், போனில் பேச்சு, மோடி

புதுடில்லி : இந்தியாவின் பிரதமராக 2 வது முறையாக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

நடந்து முடிந்த 17 வது லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதிலும், பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.


இம்ரான் வாழ்த்து :


தேர்தல் வெற்றிக்கு பின்னர், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன ஜனாதிபதி ஜீஜின் பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாக்., பிரதமர் இம்ரான்கானும் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று (மே 26) இந்திய பிரதமர் மோடியுடன் நேரடியாக போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்து இம்ரான்கான் பேசியுள்ளார். அப்போது, இருநாடுகள் இடையில் ஒற்றுமை நிலவவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியாக ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.


புல்வாமா : பாலக்கோட்


காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 44 இராணுவ வீரர்களை கொன்றனர். அதற்கு பதிலடியாக, இந்திய விமானப்படை, பாக்கிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாலக்கோட் பயங்கரவாதிகள் முகாம் மீது துல்லியதாக்குதலை நடத்தியது. இதில், நுாற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


அபிநந்தன் :


பாக்., விமானத்தை விரட்டிச்சென்ற இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இந்த தொடர் சம்பவங்களால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றம் அதிகரித்தது. இந்தநிலையில், தேர்தல் வெற்றிக்கு போனில் தொடர்புகொண்டு இம்ரான்கான் வாழ்த்திய நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-மே-201906:18:07 IST Report Abuse
Sanny இம்ரான், மோடிஜி இரண்டுபேரையும் அவங்க இஷ்டத்துக்குப்பேசி ஒரு முடிவு எடுக்க விடுங்கள் வாசகர்களே, இனிமேலாவது மோடிஜியின் முயட்சியால் இரு நாட்டுக்கும் நல்ல பரஸ்பர உறவு வரட்டும், தீவிரவாதம் ஒழியட்டும். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மனித நேயமுள்ள பிரதமர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பதைவிட்டால் இனி இப்படி ஒரு சந்தர்ப்பம் வராது.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
26-மே-201919:42:50 IST Report Abuse
 Muruga Vel முப்பதாம் தேதி முதல் விமானங்கள் பயணிக்க அனுமதி ...இப்போதைய நிலைமையில் இந்திய ஆதரவு பாகிஸ்தானுக்கு தேவை ..CPEC சீனாவால் செயல்படுத்தும் திட்டத்தால் ஏராளமான சீனர்கள் பாகிஸ்தானில் வேலை செய்கிறார்கள் ..புனித ரம்ஜான் மாதத்தில் பல்லாயிரக்கணக்கான சீனர்கள் நாய் பூனை மற்றும் பறவைகளை சமைத்து சாப்பிடுவார்கள் ...அதையே சகித்து வாழும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுடன் அனுசரித்து போவதை விரும்ப வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
26-மே-201918:59:16 IST Report Abuse
Ramamoorthy P பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நிச்சயம் அழைப்பு உண்டு . உங்கள் தீவிரவாதிகளிடமிருந்து உங்களுக்கு எச்சரிக்கை வராமல் இருந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X