பொது செய்தி

தமிழ்நாடு

'டான்செட்' தேர்வு : மே 31 வரை அவகாசம்

Added : மே 26, 2019
Advertisement

சென்னை : தமிழ்நாடு அரசு மற்றும் அண்ணா பல்கலைகழகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் 'டான் செட்' நுழைவுத்தேர்வுக்கான கால அவகாசம் வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பில், எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.ஆர்க்., போன்ற படிப்புகளில் சேர்வதற்காக தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் 'டான்செட்' நுழைவு தேர்வு நடத்தி வருகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள், கடந்த மே 8 அன்று தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க இன்று தான் (மே 26) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க மே -31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலை கழகம் அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X