ராகுல்,மம்தா ராஜினாமா நாடகம் : டைரக்டர் கிண்டல்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (24)
Advertisement
ராகுல், மம்தா, ராஜினாமா, அனுராக் காஷ்யாப்

புதுடில்லி : காங்., தலைவர் ராகுல் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பியதையும், அதை அவர்களின் கட்சியினர் ஏற்க மறுத்ததையும் பாலிவுட் சினிமா டைரக்டர் அனுராக் காஷ்யாப் டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் மிக மோசமாக காங்., கட்சி தோல்வி அடைந்ததால், தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக போவதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் அறிவித்தார். இது குறித்து விவாதிப்பதற்காக கூடிய கட்சியின் செயற்குழுவில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதனை ஏற்க மறுத்ததுடன், ராகுலே கட்சி தலைவராக தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டதால் ராகுல் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

இதே போன்று மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்., பெற்ற தோல்வியால் இனி தான் முதல்வர் பதவியில் தொடர விரும்பவில்லை என மம்தா கூறினார். அவரது கட்சி நிர்வாகிகளும் இதனை ஏற்க மறுத்ததால், மம்தாவும் முடிவை மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக பாலிவுட் சினிமாவின் பிரபல டைரக்டர் அனுராக் காஷ்யாப் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளர். அதில், மம்தா ராஜினாமா செய்ய விரும்பினார். ஆனால் அவரது கட்சி அதனை ஏற்க மறுத்தது. ராகுலும் ராஜினாமா செய்ய விரும்பினார். ஆனால் அவரது கட்சியும் அதை ஏற்க மறுத்தது. நாங்களும் இந்த செயல்பாட்டை பாராட்ட விரும்புகிறோம். ஆனால் எங்களின் அறிவுத்திறன் இதனை நம்ப மறுக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-201910:39:22 IST Report Abuse
kulandhai Kannan செம நக்கல்
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
27-மே-201904:45:52 IST Report Abuse
B.s. Pillai She was dreaming to get P.M. post and there came a big jolt by the General Public . Unable to digest it. Her party workers played havoc in the voting booths. Otherwise, BJP would have won a few more seats.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மே-201903:21:39 IST Report Abuse
J.V. Iyer பதவி, அதிகாரம் இல்லாமல் இரு நிமிடம் கூட இவர்களால் இருக்கமுடியாது. இவர்களாவது.. பதவியை துறப்பதாவது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X