மே 30 ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பு

Added : மே 26, 2019 | கருத்துகள் (9)
Advertisement
மோடி, பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகை

புதுடில்லி : மே 30 ம் தேதி இரவு 7 மணிக்கு 2வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் மே 30 அன்று இரவு 7 மணிக்கு மோடி, பிரதமராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளது. அமைச்சரவை உறுப்பினர்களும் அன்றே பதவியேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இதனையடுத்து புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்டை நாட்டு தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swis Bank Chowkidar - Chennai,இந்தியா
27-மே-201901:31:18 IST Report Abuse
Swis Bank Chowkidar வாழ்த்துக்கள், பாரத பிரதமர் என்ற முறையில்.
Rate this:
Share this comment
Cancel
S.R. Nagarajan - Chennai,இந்தியா
26-மே-201919:39:35 IST Report Abuse
S.R. Nagarajan நமது பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு ஒரு இக்கட்டான நிலையை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு மந்திரி சபையில் இடம் கொடுப்பது பற்றி. காரணம் தா,நா. வில் ஒருவர் தான் பா.ஜ.க. உறுப்பினர். கேரளாவில் அதுவும் இல்லை. மாநில சபை (ராஜ்ய சபா) உறுப்பினர்களில் ஒருவருக்கு தான் வாய்ப்பு. பாப்போம் .
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
26-மே-201919:35:21 IST Report Abuse
Sudarsanr திரு மோடி அவர்களுக்கும் அவரின் அமைச்சரவை சகாக்களுக்கு என் வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X