பொது செய்தி

இந்தியா

கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு சிபிஐ., சம்மன்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் நாளை(மே 27) விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ.,சம்மன் அனுப்பி உள்ளது.



latest tamil news




சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜிவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் ஷில்லாங்கில் ராஜிவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.


latest tamil news




இந்நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜிவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டில் தனக்கு முன்ஜாமின் கோரி ராஜிவ்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


latest tamil news




இதன் பின்னர், சி.பி.ஐ., சார்பில் ராஜிவ்குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சி.பி.ஐ., அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியுள்ளது.



இந்நிலையில், சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் நாளை(மே 27) விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ.,சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-மே-201906:33:44 IST Report Abuse
Cheran Perumal மாதாவின் கைக்கூலி இந்த போலீஸ் அதிகாரி. மத்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya,இந்தியா
26-மே-201922:10:20 IST Report Abuse
Rajan கனியக்கா, ராஜா மாமா : அடி வயத கலக்குதே, 🤔 இதுல இந்த சூசை வேற ஓவர் builtup
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-மே-201921:52:16 IST Report Abuse
அசோக்ராஜ் சிங்கவி, பூஷன், சிப்பல், ஜெய்சிங், குரோவர் ...... எல்லாருமே இவரை அம்போன்னு விட்டு ஒதுங்கிட்டாங்களா? ஆச்சர்யமா இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X