கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு சிபிஐ., சம்மன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு சிபிஐ., சம்மன்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (6)
Share
கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் நாளை(மே 27) விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ.,சம்மன் அனுப்பி உள்ளது.சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜிவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட்

கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் நாளை(மே 27) விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ.,சம்மன் அனுப்பி உள்ளது.



latest tamil news




சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜிவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் ஷில்லாங்கில் ராஜிவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.


latest tamil news




இந்நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜிவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டில் தனக்கு முன்ஜாமின் கோரி ராஜிவ்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


latest tamil news




இதன் பின்னர், சி.பி.ஐ., சார்பில் ராஜிவ்குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சி.பி.ஐ., அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியுள்ளது.



இந்நிலையில், சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் நாளை(மே 27) விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ.,சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X