பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மின்னணு ஓட்டு இயந்திரத்தின் துல்லியம்
தெளிவுபடுத்தியது, வி.வி.பி.ஏ.டி.,

புதுடில்லி: 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத் தில் பதிவான ஓட்டுகளை, வி.வி.பி.ஏ.டி., எனப் படும், ஓட்டு உறுதி இயந்திரத்தில் பதிவான சீட்டுகளுடன் எண்ணிப் பார்த்து ஒப்பிட்டதில், எந்த முரண்பாடும் கண்டுபிடிக்கப்படவில்லை' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 மின்னணு ஓட்டு இயந்திரம், துல்லியம், வி.வி.பி.ஏ.டி.,



'மின்னணு ஓட்டு இயந்திரத்தில், முறைகேடு கள் நடக்கிறது; அதன் நம்பகத் தன்மை சந்தேகமாக உள்ளது' என, 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ததன. இதையடுத்து, மின்னணு ஓட்டு இயந்திரத்துடன், வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தை, தேர்தல் ஆணையம் இணைத்தது.


சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், 'மின் னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை, ஓட்டு உறுதி இயந்திரத்தில் பதிவாகும் சீட்டுகளுடன் எண்ணி பார்த்து

ஒப்பிட வேண்டும்' என, தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.இதற்கு தேர்தல் ஆணையம், 'ஒரு சட்டசபை தொகுதியில், ஒரு ஓட்டுச்சாவடியில் மட்டுமே, அப்படி எண்ண முடியும்' என, தெரிவித்தது.


இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஒரு சட்டசபை தொகுதியில், ஐந்து ஓட்டுச்சாவடிகளில், ஓட்டு உறுதி இயந்திரத்தில் பதிவாகும் சீட்டுகளை எண்ண வேண்டும்' என, உத்தரவிட்டது. இதை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.லோக்சபா தேர்தல் முடிவுகள், 23ல் வெளியாகின.



இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 'ஒவ்வொரு சட்டசபை தொகுதி யிலும், ஐந்து ஓட்டுச்சாவடிகளில், ஓட்டு உறுதி இயந்திரத்தில் பதிவான சீட்டுகள் எண்ணப்பட்டன. ஒரு இடத்திலும், சிறிய முரண்பாடு கூடகண்டு பிடிக்கப்படவில்லை. மின்னணு இயந்திரத்திலும், ஓட்டு உறுதி இயந்திரத்திலும் பதிவான ஓட்டுகள், சரியாக இருந்தன' என, கூறியுள்ளது.


ஒரு லட்சம் ஓட்டில் 8 தொகுதிகள்கடந்த, 2014 தேர்தலில், காங்., 44 இடங்களில் வெற்றி பெற்றது; இம்முறை, 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கடந்த தேர்தலை விட, இம்முறை,

Advertisement

காங்கிரஸ், ஒரு லட்சத்து, 4,475 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக வாங்கியுள்ளது.இப்போது வென்றுள்ள, 52 இடங்களில், ஒன்பது தொகுதி களில், 26 ஆயிரத்துக்கும், குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்., வெற்றி பெற்றுள்ளது.



அந்தமான் - நிகோபார் தொகுதியில், 1,407 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான், காங்., வெற்றி பெற்று உள்ளது.ஒடிசாவின் கோராபுட் தொகுதியில், 3,613 ஓட்டுகள் வித்தியாசத்தி லும், தெலுங்கானா வின் கவுட் தொகுதியில், 5,219 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

கேரளாவின் பாலக்காடு, பஞ்சாபில் ஜலந்தர் உட்பட ஐந்து தொகுதி களில், 20 ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
27-மே-201922:47:24 IST Report Abuse

venkatanஎப்போதும் இந்த மாதிரி டெக்னீக்கல் சப்ஜெக்ட் ல் நம் நீதி அரசர்கள் தீர்ப்பளிக்கும்போது துறை வல்லுநர்களின் கருத்தை சொல்லச் சொல்லி,அதன் பிரகாரம் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
27-மே-201922:21:42 IST Report Abuse

RajanRajanEVM ஐ எதிர்த்த 22 ஊழல் நாயகர்களின் எதிர்கட்சிகளின் நொக்கம் என்ன என்பது இப்ப புரிந்ததா மக்களே? நாயுடு ரோம்ப பாதிக்கபட்டுள்ளாரோ தேவுடு

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
29-மே-201916:38:44 IST Report Abuse

எதிர்க்குரல் எங்க வோட்டு மெஷினுக்குள் இல்ல EVM ...இதெப்படி இருக்கு?? அல்லக்கைகள் தேவையில்லாமல் வாக்கு இயந்திரத்தை துல்லியமானது என்று சொல்லும் போதுதான் எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை என்று சொல்வது மாதிரி உள்ளது... ராஜ தந்திரம் வாக்கு மந்திரம் வாக்கு பெட்டியே மாத்திட்டோம். ...

Rate this:
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-மே-201921:36:33 IST Report Abuse

DARMHARதேர்தலில் தோல்வி கண்ட எதிர் கட்சிகள் பல வோட்டு மெஷின்கள் மீது குற்றம் சுமத்தினாலும் தனது மகன் கார்த்தி தேர்தலில் வெற்றி பெற்றதால் ப.சி மட்டும் எந்த ஒரு குறையும் சொல்லாமல் கமுக்கமாக இருந்துவிட்டது ஏன் என்பது புரியாத புதிர் ஒன்றும் அல்ல.

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X