பொது செய்தி

தமிழ்நாடு

மாம்பழங்களை ருசிப்பதில் கவனம் தேவை : ஏமாறாமல் இருக்க அறிவுரை

Added : மே 26, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 மாம்பழங்களை ருசிப்பதில் கவனம் தேவை : ஏமாறாமல் இருக்க அறிவுரை

பந்தலுார்:பந்தலுார் பகுதிகளில் முகாமிடும், மாம்பழ வியாபாரிகளிடம், மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநில எல்லையான பந்தலுார் பகுதியில், தமிழகம், கேரள மாநிலங்களை சேர்ந்த மாம்பழ வியாபாரிகள், தற்போது அதிகளவில் முகாமிட்டுள்ளனர். மாம்பழங்களை பழுக்க வைக்க பல்வேறு ரசாயனம் தெளிக்கப்படுகிறது.
உள்ளூர் பழ வியாபாரிகளிடம் கூடுதல் விலையாக இருந்தாலும், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், திடீரென வரும் வியாபாரிகளிடம், மிக குறைந்த விலைக்கு மாம்பழங்களை வாங்கி, ருசித்த பின்னர் பாதிப்புகள் ஏற்பட்ட, பிறகு புகார் தெரிவித்து பயனில்லை.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணி கூறுகையில், ''ஞாயிறு உட்பட, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நாட்களில், இதுபோன்ற வியாபாரிகள், முகாமிட்டு, ரசாயனத்தில் பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் உள்ளனர். குறைந்த விலை என நினைத்து, இவற்றை உட்கொண்டு நோயை வரவழைப்பதை விட்டுவிட்டு, தரமான மாம்பழங்களை வாங்குவது அவசியம்.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
06-ஜூன்-201913:13:28 IST Report Abuse
bal என்னவோ உள்ளூர் கார வியாபாரிகள் யோக்கியம் மாதிரி பேச்சு....முதல் திருடர்கள் உள்ளூர்காரர்கள்தான்.
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
28-மே-201911:06:48 IST Report Abuse
நெல்லை மணி, ரசாயனத்தில் பழுக்க வைத்த பழங்களை எப்படி கண்டு பிடிப்பது?
Rate this:
Share this comment
A P - chennai,இந்தியா
03-ஜூன்-201911:59:36 IST Report Abuse
A Pஅப்படிப்பட்ட பழங்கள் புளிப்பாகவோ, சப்பென்றோ தான் இருக்கும். ( முழுப் பழத்தை அல்லாமல் ) கொஞ்சமாய் ருசி பார்த்து பிறகு நிறைய வாங்குங்கள். இனிப்பில்லாமல் இருந்தால் வாங்காதீர்கள். மேலும் கலரைக் கண்டு மயங்காதீர்கள் மக்களே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X