அமேதி எம்.பி., ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை

Added : மே 26, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 அமேதி எம்.பி., ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை

அமேதி:அமேதி தொகுதி, எம்.பி., ஸ்மிருதி இரானியின் உதவியாளர், சுட்டுக் கொல்லப்பட்டார். இறுதி யாத்திரையில் பங்கேற்ற ஸ்மிருதி, சுரேந்தர சிங்கின் உடலை, மயானத்துக்கு சுமந்து சென்றார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சிநடக்கிறது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இம்மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுலை, பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார்.தேர்தலின் போது, ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக, மிகவும் தீவிரமாக பிரசாரம் செய்தவர், பரவுலியா கிராம பஞ்சாயத்து, முன்னாள் தலைவர், சுரேந்தர சிங், 50; ஸ்மிருதி இரானியின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்தார்.தேர்தல் பிரசாரத்தின் போது, 'பரவுலியா கிராம மக்களிடம், காலணிகளை கொடுக்கச் செய்து, ராகுலை அவமதித்து விட்டார்' என, சுரேந்தர சிங் மீது, காங்., பொதுச் செயலர், பிரியங்கா குற்றஞ் சாட்டினார்.தேர்தலில், ஸ்மிருதி வெற்றி பெற்றதற்காக, சுரேந்தர சிங்கை, பா.ஜ., மூத்த தலைவர்கள் பலரும் பாராட்டினர்.இந்நிலையில், அமேதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று, பரவுலியாவில் உள்ள வீட்டுக்கு, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, சுரேந்தர சிங் திரும்பினார்.அப்போது, மர்ம நபர்கள் சிலர், சுரேந்தர சிங்கை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர்.ரத்த வெள்ளத்தில் விழுந்த சுரேந்தர சிங், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில், இரண்டு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுரேந்தர சிங் கொலைக்கு, உ.பி., துணை, முதல்வர் மவுரியா கூறுகையில், ''ஸ்மிருதியின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களே, சுரேந்தர சிங்கை கொன்றுள்ளனர்,'' என்றார்.இறுதிச்சடங்கில் ஸ்மிருதிஇதற்கிடையில், சுரேந்தர சிங் கொல்லப்பட்டது பற்றி தகவல் அறிந்த ஸ்மிருதி இரானி,டில்லியிலிருந்து அமேதிக்கு காரில் சென்றார், சுரேந்தர சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்தெரிவித்தார்.இறுதி யாத்திரையில் பங்கேற்ற ஸ்மிருதி,சுரேந்தர சிங்கின் உடலை, மயானத்துக்கு சுமந்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-மே-201907:03:28 IST Report Abuse
Cheran Perumal தேர்தல் சவாலில் தோற்ற காங்கிரசார் வன்முறையில் இறங்கியுள்ளனர். அடி வேரை பிடித்து ஆட்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X