பொது செய்தி

இந்தியா

ராஜிவ் குமார் தப்பிக்கலாம் விமான நிலையங்களுக்கு உஷார்

Added : மே 26, 2019
Advertisement
 ராஜிவ் குமார் தப்பிக்கலாம் விமான நிலையங்களுக்கு உஷார்

புதுடில்லி:'சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் விசாரிக்கப்பட உள்ள, கோல்கட்டாவின் முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமார், வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம்' என, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு, சி.பி.ஐ., எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது.கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட, சாரதா சிட்பண்ட் நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.இது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முன்னதாக, இந்த வழக்கை, கோல்கட்டா போலீஸ் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தன.கோல்கட்டா போலீஸ் கமிஷனர் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு தலைவராக இருந்த, மூத்த போலீஸ் அதிகாரி, ராஜிவ் குமார், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை மறைத்ததாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, கோல்கட்டாவில், ராஜிவ் குமாரின் வீட்டில் சோதனை செய்ய, சி.பி.ஐ., அதிகாரிகள் முயன்றனர்; அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், சி.பி.ஐ.,யை கண்டித்து, மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராஜிவ் குமாரை கைது செய்து விசாரிப்பதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. சமீபத்தில் இந்தத் தடை நீக்கப்பட்டது.தற்போது முன்ஜாமின் கேட்டு, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கில், ராஜிவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ., தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், 'ராஜிவ் குமார் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம்; அதனால், உஷார் நிலையில் இருக்க வேண்டும்' என, அனைத்து விமான நிலையங்களுக்கும், சி.பி.ஐ., எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X