வீடு, கார் இல்லாத எம்.பி., : சைக்கிளில் செல்லும் எளிமை

Updated : மே 27, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
புவனேஷ்வர்:ஒடிசாவில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ., - எம்.பி.,.க்கு, சொந்தமாக, வீடு, வாகனம் எதுவும் இல்லை. குடிசையில் வசிக்கும் இவருக்கு சொந்தமாக, சைக்கிள் மட்டுமே உள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதாதள அரசு நடக்கிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பட்டதாரி கள், சமூக ஆர்வலர்கள் என,
 வீடு, கார்,   எம்.பி., சைக்கிள், எளிமை

புவனேஷ்வர்:ஒடிசாவில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ., - எம்.பி.,.க்கு, சொந்தமாக, வீடு, வாகனம் எதுவும் இல்லை. குடிசையில் வசிக்கும் இவருக்கு சொந்தமாக, சைக்கிள் மட்டுமே உள்ளது.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதாதள அரசு நடக்கிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பட்டதாரி கள், சமூக ஆர்வலர்கள் என, பலரும் தேர்தலில் களம் இறங்கினர். இதில், ஓடிசா மக்களை கவர்ந்த வேட்பாளர், பா.ஜ.வை சேர்ந்த, பிரதாப் சந்திரா சாரங்கி, 64.தேர்தலில், வேட்பாளர்கள் பலரும், பணத்தை வாரி இறைத்தனர். கார்ககள், வேன்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தினர்.

ஒடிசாவின், பலசோர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பிரதாப் சந்திரா, ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்தார். இவருக்கு சொந்தமாக வீடு, சொத்து, கார் எதுவும் கிடையாது,சிறு வயதிலேயே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சேர்ந்தார். துறவியாக விரும்பி, ராமகிருஷ்ண மடத்தை அணுகினார், ஆனால், அவர்கள், 'தாயை கவனிப்பது தான், சிறந்த சேவை' என, கூறி, சந்திராவை திருப்பி அனுப்பினர்.

இதன்பின்னும், திருமணம் செய்து கொள்ளாமல், சமூக சேவையில் ஈடுபட்டார். குடிசை வீட்டில் தாயுடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு, தாய் இறந்த பிறகும், அதே வீட்டில் வசிக்கிறார்.மது, ஊழல், போலீஸ் அராஜகம் ஆகியவற்றுக்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை, தொடர்ந்து நடத்தி வருகிறார். இதற்காக அவர் செல்வது, சைக்கிளில் தான்.

பலசோர், மயூர்பான்ச் பகுதிகளில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின குழந்தைகள் படிப்பதற்காக, பள்ளிகளை நடத்தி வருகிறார். இவரை, 'ஒடிசாவின் நரேந்திர மோடி' என, பா.ஜ., வினரும், அப்பகுதி மக்களும். அன்புடன் அழைக்கின்றனர்.

பலசூர் தொகுதியில், பிஜு ஜனதா தளத்தின் பெரும் கோடீஸ்வர வேட்பாளர், ரவீந்திர குமாரை, 12 ஆயிரத்து, 956 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, பிரதாப் சந்திரா, எம்.பி.,யாகி உள்ளார்.எம்.பி.,யாக பதவியேற்க, டில்லி புறப்பட்டு சென்ற போது, அவரது உடமைகள் அனைத்தும் ஒரு சிறிய பையில் அடங்கிவிட்டன.இளம் எம்.பி.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இளம் வயது எம்.பி., என்ற பெருமையை, ஒடிசாவின், பிஜு ஜனதாதளத்தை சேர்ந்த, சந்திராணி முர்மு, பெற்றுள்ளார்.

ஒடிசாவின், கியோன்ஜார் தனி தொகுதியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வயது, 25 ஆண்டு, 11 மாதங்களாகிறது. லோக்சபா வரலாற்றிலேயே, மிக குறைந்த வயதில் எம்.பி.,யான வர் என்ற, பெருமை, முர்முக்கு கிடைத்துள்ளது.முர்மு கூறுகையில், ''பி.டெக்., படிப்பு முடித்து, 2017ல் பட்டம் பெற்றேன். வேலை தேடிக் கொண்டிருந்தேன். அரசியலில் ஈடுபட்டு, எம்.பி., ஆவேன் என, கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால், அந்த வாய்ப்பபை எனக்கு முதல்வர், நவீன் பட்நாயக் கொடுத்துள்ளார்,'' என்றார்.கடந்த லோக்சபாவில், இந்திய தேசிய லோக்தள் கட்சியை சேர்ந்த, துஷ்யந்த் சவுதாலா, 26 வயதில் வெற்றி பெற்று, மிக இளம் எம்.பி., என்ற சாதனை படைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
06-ஜூன்-201913:40:41 IST Report Abuse
Ramamoorthy P இநதியா முழுவதும் இப்படிப்பட்ட மோடிகள் உருவாக வேண்டும்
Rate this:
Cancel
INNER VOICE - MUMBAI,இந்தியா
03-ஜூன்-201907:41:36 IST Report Abuse
INNER VOICE திமுக -காங்கிரஸ் இவரிடம் பாடம் கற்க வேண்டும், கோடிக்கணக்கில் பல தலை முறைக்கு பணம் சேர்க்கும் திமுக காங்கிரஸுக்கும், பிஜேபி பிரதாப் சந்திர சாரங்கிக்கும் எவ்வளவு வித்தியாசம். வாழ்த்துக்குள் பிரதாப்.
Rate this:
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
27-மே-201923:08:33 IST Report Abuse
balasubramanian Aaaha, the great.he will be the HERO in parliament.i salute this real life HERO.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X