பதிவு செய்த நாள் :
30ம் தேதி!
பிரதமராக 2வது முறையாக பதவியேற்கிறார் மோடி...
புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு

புதுடில்லிLலோக்சபா தேர்தலில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக, நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக, வரும், 30ம் தேதி மாலை பதவியேற்கிறார். அவருடன், அமித் ஷா உள்ளிட்ட புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இதற்காக, ஜனாதிபதி மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.

பிரதமர், பதவியேற்கிறார், மோடி, புதிய அமைச்சரவை,வாய்ப்பு


ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த கூட்டணி, 352 இடங்களில் வென்றது. பா.ஜ., மட்டும், தனியாக, 303 இடங்களில் வெற்றி பெற்றது.குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், டில்லி, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், பெரும்பாலான லோக்சபா
தொகுதிகளை, பா.ஜ., கைப்பற்றியது.


கடிதம்இதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை பதவி யேற்பதற்காக, பழைய அமைச்சரவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்திடம், மோடி அளித்தார்.இந்நிலையில், தே.ஜ., கூட்டணியின் தலைவரை தேர்வு செய்வதற்காக, அந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், டில்லியில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதில், பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு, பிரதமர் மோடி, நன்றி தெரிவித்தார்.


இதன்பின், ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற மோடி, ஆட்சி அமைப்பதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரினார். தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்கள் கொடுத்த ஆதரவு கடிதத்தையும், ஜனாதிபதியிடம், அவர் அளித்தார்.ஆட்சியமைக்க, ஜனாதிபதி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, 30ம் தேதி மாலை,

7 மணிக்கு, பதவியேற்கிறார்.இதற்கான முறைப்படி யான அறிவிப்பை,ஜனாதிபதி மாளிகை வெளியிட்டு உள்ளது.ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் இந்த விழாவில், பிரதமருடன், அவரது அமைச்சரவையும் பதவியேற்கிறது.

யார் யார்?கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கப் பட்டு, அமைச்சரவையில் இடம் பெறவுள்ளவர் களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும், புதிய அமைச்சரவையில், யார் யார் இடம் பெறவுள்ளனர் என்பது குறித்த விபரம், மிகவும் ரகசியமாக வைக்க பட்டு உள்ளது.இது குறித்து, பா.ஜ., வட்டாரங்களில் கூறப்படுவதாவது:


பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவுக்கு, உள்துறை, வெளியுறவு, நிதி அல்லது ராணுவம் உள்ளிட்ட நான்கு முக்கிய இலாகாக்களில், ஏதாவது ஒன்று தரப்படும். புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்புகள் தரப்படலாம்.பழைய அமைச்சரவையில் சரியாக பணியாற்றாதவர்கள், தேர்தலில் தோற்ற வர்களுக்கு, இந்த முறை அமைச்சரவையில் இடம் கிடைக்காது.


மேற்கு வங்கம், ஒடிசா, உ.பி., ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், டில்லி, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு, அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கலாம்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலத்தீவு செல்கிறார் மோடி


கடந்த முறை பிரதமராக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக, தெற்காசிய நாடான, பூடானுக்கு, மோடி சென்றார். இந்த முறை, மற்றொரு தெற்காசிய நாடான, மாலத்தீவுக்கு, அவர் செல்வார் என, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை, மாலத்தீவு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆனாலும், இதுகுறித்து அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடபட வில்லை. இதற்கிடையே, தேர்தல் வெற்றிக்காக, பிரதமர் மோடிக்கு, சர்வதேச நாடுகளின் தலைவர்கள், தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரிட்டன்பிரதமர்,

Advertisement

தெரசா மே, சவுதி அரேபிய இளவரசர், முகமது பின் சல்மான் உள்ளிட்ட தலைவர்கள், நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இம்ரான் கானுடன் பேச்சு
அண்டை நாடான, பாகிஸ்தானின் பிரதமர், இம்ரான் கான், நேற்று, பிரதமர் மோடியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த அவர், ''இரு நாட்டு மக்களின் நலனுக்காக, இரு நாட்டு அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.இம்ரான் கானின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த, பிரதமர் மோடி, ''ஆசிய பிராந்தியத்தில், அமைதியான சூழ்நிலையை உருவாக்க, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழ்நிலையை உருவாக்கி, நம்பிக்கையை ஏற்படுத்த, பாக்., ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.இந்த தகவலை, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.தாயிடம் ஆசிபிரதமர் மோடி, நேற்று, குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தார். அவருடன், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும் வந்தார்.விமான நிலையம் அருகே உள்ள, சர்தார் வல்லபபாய் சிலைக்கு, மோடி உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின், கட்சி அலுவலகம் சென்ற மோடி, அங்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.இதைத் தொடர்ந்து, தன் தாய் வசிக்கும் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார்.


முன்னதாக, டில்லியில் நேற்று காலை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, பிரதமர் மோடி, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இன்று, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, தன் சொந்த தொகுதியான, வாரணாசி செல்கிறார். திறந்த வாகனத்தில் சென்று, வாக்காளர்களக்கு நன்றி தெரிவிக்கும் மோடி, பா.ஜ., தொண்டர் களிடையே உரை நிகழ்த்தவுள்ளார். இந்த தொகுதியில், 4.79 லட்சம் ஓட்டு வித்தியாசத் தில், அவர் வெற்றி பெற்றார்.பின், பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார். கங்கா ஆரத்தி, வழிபாட்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divahar - tirunelveli,இந்தியா
27-மே-201912:42:54 IST Report Abuse

Divaharஇரண்டாவதாக பதவி ஏற்கும் போது பெட்ரோல் விலை குறைப்பேன் என சொன்னார். வட மாநிலங்களுக்காவது குறைப்பாரா?

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-மே-201913:51:53 IST Report Abuse

ஆரூர் ரங்தேசத்துரோகம் செய்யமாட்டார் .விலையைக்குறைத்து இறக்குமதியை அதிகரிக்க விடுவது மஹா மஹா தேசதுரோகம் ...

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
27-மே-201912:23:57 IST Report Abuse

ganapati sbதாய் சொந்த மாநிலமக்கள் தேர்ந்தெடுத்த வாரணாசி மக்கள் காசி விஸ்வநாதர் கங்கை என தொடர் ஆசிபெறும் நரேந்திரர் சென்ற தடவை நிதி துறை புரட்சி விவசாய துறை புரட்சி ஆரோக்யா துறை புரட்சி வெளியுறவுத்துறை புரட்சி செய்தது போல இந்த தடவை கல்வி துறை புரட்சி தொழில்நுட்பம் புரட்சி மற்றும் ஊழல்வாதிகள் பிரிவினைவாதிகள் களையெடுப்பில் முனைப்பு காட்டட்டும் .

Rate this:
S.kausalya - Chennai,இந்தியா
27-மே-201912:17:15 IST Report Abuse

S.kausalyaதமிழ் நாட்டில் போட்டியிட்ட 5 பேரில் இருவருக்கு மந்திரி பதவி அளிக்கலாம். Ops மகனுக்கு இலாகா இல்லாத மந்திரி போதும். கேரளாவிலும் கட்சியில் மேன்மையாக உழைத்த இரண்டு பேருக்கு மந்திரி கொடுக்கலாம். இவ்விரு மாநில மக்களுக்கும், நீங்கள் இவர்களை வெற்றி அடைய செய்யாவிட்டாலும், அவர்கள் உங்களுக்காக பணி ஆற்றுவார்கள் என உணர்த்தலாம். இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவர்கள் இல்லை தான் இந்த இரு மாநில மக்களும்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X