பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சந்திரபாபு நாயுடு ஊழல்'தோண்ட' ஜெகன் முடிவு

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ஆந்திரா வுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து விவாதித்த, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர முதல்வராக தான் பதவியேற்கும் விழாவுக்கு, அழைப்பு விடுத்தார்.

 சந்திரபாபு நாயுடு, ஊழல்,ஜெகன், முடிவு


லோக்சபா தேர்தலுடன், ஆந்திரா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள, 175 சட்டசபை தொகுதிகளில், ஒய்.எஸ்.ஆர்., காங்., 151ல் வென்றது; மேலும், 25 லோக்சபா தொகுதிகளில், 22ல் வென்றது. வரும், 30ல் ஆந்திரா முதல்வராக, ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான, ஜெகன் மோகன் பதவியேற்க உள்ளார்.


வலியுறுத்தல்


இந்நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள, பிரதமர் நரேந்திர மோடியை, டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்னை குறித்து, அவர் விவாதித்தார்.மேலும், தன் பதவியேற்பு விழாவுக்கு வருகை தரும்படி, பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.அதைத் தொடர்ந்து, பா.ஜ., தலைவர், அமித் ஷாவையும், அவர் சந்தித்தார். ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா

தனி மாநிலம், 2014ல் பிரிக்கப்பட்டது. அப்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.


ஆட்சி மாற்றம்
இந்தப் பிரச்னையில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமையிலான,தெலுங்கு தேசம் வெளியேறியது. இந்தத் தேர்தலில், அந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதனால் தான், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுஉள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்புக்குப் பின், நிருபர்களிடம், ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:லோக்சபா தேர்தலில், பா.ஜ., 250க்கும் குறைவான தொகுதிகளில் வென்றிருந்தால், நன்றாக இருந்திருக்கும். அப்போது, ஆட்சி அமைக்க எங்களுடைய ஆதரவு தேவைப்பட்டிருக்கும். ஆனால், தற்போது மிகவும் வலுவாக அவர்கள் உள்ளனர்.அதனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியை வற்புறுத்தவோ, உத்தரவிடவோ முடியாது; கோரிக்கை தான் வைக்க வேண்டும்.ஆந்திரா தனியாக பிரிக்கப்பட்டபோது, மாநிலத்தின் மொத்த கடன் தொகை, 97 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஐந்து ஆண்டுகளில், 2.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பிரதமரை நேரில் சந்தித்து, மாநிலத்தின் பிரச்னை குறித்து விவரித் தோம். அவரும் பொறுமையுடன் கேட்டார். நல்ல முடிவு எடுப்பார் என,எதிர்பார்க்கிறோம். பிரதமரை சந்திக்கும் போதெல்லாம், சிறப்பு அந்தஸ்து கோரிக்கை குறித்து பேசுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

நாயுடு ஊழல்'தோண்ட' ஜெகன் முடிவுஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள, ஜெகன்

Advertisement

மோகன் ரெட்டி மேலும் கூறியதாவது:வரும், 30ல் நான் மட்டும் பதவியேற்பேன்; அடுத்த, 10 நாட்களுக்குள் அமைச்சர்கள் பதவியேற்பர். பிரசாரத்தின்போது, மாநில மக்களுக்கு, பல்வேறு உறுதிமொழிகளை அளித்துள்ளேன்; அவற்றை நிறைவேற்றுவதே, என்னுடைய அரசின் முன்னுரிமையாக இருக்கும்.அமராவதியில், மாநிலத்தின் புதிய தலைநகர் அமைப்பதில், பல கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இது, சாதாரணமான ஊழலல்ல. தெலுங்கு தேசம் ஆட்சியின்போது நடந்த, அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரிக்கப்படும். அமராவதி யில் தலைநகர் அமைப்பதில் நடந்த ஊழல், போல வரம் நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்து வதில் நடந்த ஊழல் என, அனைத்து ஊழல்களும் தோண்டி எடுக்கப்படும்.


அடுத்த ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டுக்குள், நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாக ஆந்திராவை மாற்றிக் காட்டுவோம். மாநிலத்தில் ஊழலை அடியோடு ஒழிப்போம். என் மீது, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.என்னுடைய தந்தையும், ஆந்திரா வின் முன்னாள் முதல்வருமான, ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை பழிவாங்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சியால் ஜோடிக்க பட்டவை அந்த வழக்குகள். அவை பொய் என்பதை, இந்த தேர்தல் முடிவுகள் உறுதி செய்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மே-201918:41:48 IST Report Abuse

J.V. Iyerநாயுடுவுக்கு கெட்டகாலம் ஆரம்பிச்சாச்சு.

Rate this:
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
01-ஜூன்-201905:59:25 IST Report Abuse

DARMHARநுணலும் தன் வாயால் கெடும் என்பது போல நாயுடு காரு தனது அகம்பாவத்தினாலும் வீணான டம்ப , விபரீதமான, தன் அடக்கமில்லாத பேச்சுக்களினாலும் தன் தலையிலேயே மண்ணை வாரிக்கொள்ளும் நாள் வந்து விடும் என்பதை இவரது அகந்தை குணம் சிந்திக்க மறுத்து விட்டது என்பது தான் நிதரிசனமான உண்மை இனிமேல் நாயுடுவின் அரசியல் பிற்காலம் செல்லாக்காசுபோன்ற நிலை தான். ...

Rate this:
Puduvayal Subbuni - hyderabad,இந்தியா
28-மே-201916:24:36 IST Report Abuse

Puduvayal Subbuni

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-மே-201907:22:04 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மாநிலத்தில் ஊழலை அடியோடு ஒழிப்போம். என் மீது, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X