பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
100 நாட்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

பா.ஜ., கட்சி மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு திரும்பியுள்ள நிலையில், பங்குச் சந்தை
முதலில் ஓர் உச்சத்தைத் தொட்டு, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து,இக்கட்சி, முதல், 100 நாட்களில் என்னென்ன திட்டங்களையெல்லாம் நிறைவேற்றப் போகிறது?

 100 நாட்களில் என்ன எதிர்பார்க்கலாம்?


வர்த்தகர்கள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், பொதுமக்கள் என்று ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் எதிர்பார்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். முதல், 100 நாட்களில் என்னென்னவெல்லாம் செய்யப்பட வேண்டும் என்பதற்கான திட்டவரைவை வழங்க சொல்லி, மோடி தரப்பில் இருந்து பல்வேறு துறைகளுக்கு உத்தரவு வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக் கின்றன.இந்தப் பின்னணியில், எவை யெல்லாம் உடனடியாகச் செய்யப்படலாம்?


முதலில், புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற வுடன்,முழு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட திட்டங்களோடு, புதிய திட்டங்களும் இதில் இடம்பெறும்.


புது அரசு நீட்டிக்கும்


முக்கியமாக, தளர்ந்துபோயுள்ள நம் பொருளாதாரத்தை நிலைநிறுத்த, மக்கள் கையில் கூடுதல் பணத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால், நமது வருமான வரிச் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதில் முறையாக வரியை கட்டிக்கொண்டு இருக்கும் மக்களுக்குக் கூடுதல் சலுகை, இதர வசதிகள் அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.நடுத்தர வருவாய்ப் பிரிவினர் வீடு கட்டும்போது, வழங்கப்படும் மானியம், மார்ச் 2020 உடன் முடிவுபெற இருக்கிறது. அதனை புதிய அரசாங்கம் நீட்டிக்கும்.


ஜி.எஸ்.டி., வரி அடுக்குகளில் மாற்றம்

கொண்டுவருவது மற்றொரு முயற்சி. தற்போதுள்ள நான்கு அடுக்குகள் இரண்டு அடுக்குகளாக மாற்றப்படும். முதலில் மேலே இருக்கும், 18 மற்றும் 28 சதவீத அடுக்குகள் முழுமையாக நீக்கப்படும். வரி வருவாய் நிலைபெற்ற பின்னர் ஒற்றை வரி விதிப்பு முறைக்கு மாறும்.பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைத்து வலிமையான பெரிய வங்கிகளாக மாற்றும் நடைமுறை தொடரும். பஞ்சாப் நேஷனல் வங்கியோடு, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்சையும் இன்னும் சில, சிறு வங்கிகளும் இணைக்கப்பட வாய்ப்புண்டு.ரிசர்வ்வங்கியில் உபரியாக உள்ள தொகை, உடனடியாக மத்திய அரசுக்கு மாற்றப் படும். அதனை பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, நிதி வறட்சியில் திண்டாடிக்கொண்டு இருக்கும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இதன்மூலம், நுண், குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கூடுதல் கடன் வசதி கிடைக்கும்.

பகிர கூடாது


வங்கிகளுக்குத் தேவையான மறுமூலதனமும் கிடைக்கும். ஏற்கனவே, 'உடனடி திருத்தப் பட்டிய'லில் இருக்கும் பொதுத் துறை வங்கிகளுக்கு கொஞ்சம் தளர்வு கொடுக்கப்படும். அவை, மீண்டும் கடன்கள் வழங்குவதற்குத் தேவையான நெறி முறை ரீதியான அனுமதிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. திவால் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படும். குறிப்பாக, திவால் நிலைக்கு உள்ளான நிறுவனங்களின் வெளிநாட்டுச் சொத்துகளைக் கையகப்படுத்த வழியேற்படுத்தப்படும். மேலும், மேல்முறையீட்டு ஆணையத்திடம் பல்வேறு காரணங்களால் பல வழக்குகள் தேங்கிப் போய் இருக்கின்றன. அங்கே போதிய தெளிவு கொண்டு வரப்படுவதோடு, திவால் மேல்முறையீடு என்பது, மேலும் விரைவுபடுத்தப்பட்டு, தீர்வுகள் அளிக்கப்படும்.


இன்னொரு முக்கியமான முடிவும், முதல், 100 நாட்களுக்குள் எடுக்கப்படும். இணையதள- வர்த்தகத்துக்கான வரைவு கொள்கை பல்வேறு தடைகளைச் சந்தித்து வருகிறது. அதில் சம்பந்தப் பட்ட பல்வேறு தரப்பினர்இணைக்க பட்டு, விவாதம் விரிவாக்கப்படும்.குறிப்பாக, இதில் ஒரு பிரிவு இருக்கிறது. அதாவது, “வாடிக்கையாளர் களின் ஒப்புதலோடு பெறப்பட்ட தகவல்களைக் கூட, இதர நிறுவனங்களோடு அல்லது வேற்று நாட்டு கிளைகளோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது” என்று தெரிவிக்கிறது, வரைவு அறிக்கை.


இணையதள -வர்த்தகத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குள் தகவல்களை வைத்திருக்க

Advertisement

முடியாது, அது பல இடங்களில் சேமிக்கப்படும், பகிர்ந்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கின் றன,இணையதள வர்த்தக நிறுவனங்கள். இதுபோன்ற முரண்பாடுகள் களையப்பட்டு, ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்படும்.


அந்நியச் செலாவணி
அமெரிக்க, சீன வர்த்தக போர், ஒருவகையில் இந்தியாவுக்கு வாய்ப்பை வழங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. அதாவது சீனாவைவிட, பல துறைகளில் இந்தியாவில் உற்பத்தி செலவுக் குறைவு. இத்தகைய துறைகளை இனங்கண்டு, அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, தொழில் வளர்ச்சி மேம்படுத்தப்படும். ஏற்றுமதிகள் அதிகரிக்கப்படும். அந்நியச் செலாவணி ஈட்டப்படும்.


இதற்கு ஏதுவாகவும், பல்வேறு தொழிற் துறை கள் பயன்படும் விதமாகவும், புதிய தொழிற் கொள்கை வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திசைகாட்டியாக அமையும்.கிராமச் சாலைகள் அமைக்கும் திட்டத்தின் மூன்றாவது அலகுக்கு அனுமதி அளிக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்கள் ஆக்கப்படும். இவற்றின் மூலம், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு களும் பணப்புழக்கமும் அதிகரிக்க வாய்ப்பளிக்கப்படும்.


100 நாட்களுக்குள் இன்னும் ஏராளமான விஷயங்களைச் செய்ய முடியும். எல்லாமும் அடித்தட்டு மற்றும் மத்தியமர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் விதமாக அமைய வேண்டும். ஏனெனில், பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு இவ்விரண்டு தரப்பினரின் வாக்குகளே பெருமளவு பயன்பட்டுள்ளது என்பது கண்கூடு.

ஆர்.வெங்கடேஷ்

பத்திரிகையாளர்

Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
27-மே-201921:47:45 IST Report Abuse

ஊழல் விஞ்ஞானி தமிழ்மைந்தன் யார்?.....அவர் என்ன திமுக அனுதாபியா?....

Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
27-மே-201921:47:33 IST Report Abuse

Krishnamurthy Venkatesanம்ம்ம் ...100 நாட்களில் என்ன செய்யலாம்?.... 1. மிக குறைந்த செலவில் உலக தரம் வாய்ந்த மருத்துவ உதவி. 2. வேலைக்கு செல்லும்வரை அனைவருக்கும் கல்வி இலவசம் (கல்வி மட்டும்தான்). 3. ரோட்டில் துப்புவர்களுக்கு (வடமாநிலத்தவர்களுடன் பழகி எமது தென்னாட்டவரும் துப்ப ஆரம்பித்துவிட்டார்கள்) கடுமையான அபராதம்/தண்டனை 4. Child Care Leave ஐ 1 வருடமாக குறைத்தல். 5. மத்திய அரசு வலைகளில் அந்தந்த மாநிலத்தவரையே நியமித்தல் 6. சிறு ஓடைகளை அருகில் உள்ள சிறு நதிகளுடனும், பின் சிறு நதிகளை பெரிய ஆறுகளுடனும் இணைக்க வேண்டும். 7. விவசாய உற்பத்தியை அரசே கொள்முதல் செய்து உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்தல் 8. வடக்கே வெள்ளத்தால் ஏற்படும் பேரழிவை போக்க அந்த வெல்ல நீரை தெற்க்கே கொண்டுவந்த்தால் வடக்கே வெல்ல சேதமும் தெற்க்கே வறட்சியும் காணாமல் போகும் 9. ராணுவ வீரர்களுக்கு அவர்களின் சொந்த ஊரில் இலவச மனை/வீடு தரலாம். 10. அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆடம்பர செலவு செய்வதை கட்டு படுத்த வேண்டும். 11. திறமையாக வேலை செய்யாத ஊழியர்களை பனி நீக்கம் செய்ய வேண்டும். 12. எந்தஒரு மதத்தையும் இழிவாக பேசுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும். 13. ஊழல் குற்ற சத்துக்களை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும். 14. தரமான உயர் கல்வியை தர வேண்டும். 16. அரசின் செலவில் படிப்பவர்கள் குறைந்தது உல் நாட்டில் 5 வருடங்கள் வேலை செய்ய வேண்டும். 17. லஞ்சம் கேட்பவர்களை கொடுப்பவர்களை கடுமையாக விரைவில் தண்டிக்க வேண்டும். 18. வருமான வரி சட்டத்தில் வரி விகிதத்தை குறைத்து அதிக மக்கள் வரி சட்டத்திற்குள் கொண்டு வரப்படவேண்டும். 19. டிரஸ்ட் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்படும் வரி சலுகைகளை நீக்க வேண்டும் 20. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யாமல் கடனுக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்யலாம். 21. தனியார் வட்டி தொழிலை செய்யவிடாமல் அனைத்து தரப்பினருக்கும் வங்கி குறைந்த வட்டியில் கடன் தர வேண்டும். 21. மருத்துவர், அட்வொகேட்ஸ் சி.ஏஸ், architects , என்ஜினீர்ஸ் போன்ற professionals க்கு எவ்வளவு fees எந்தமாதிரியான வேலைகளுக்கு எவ்வளவு என்று ஒரே சீரான முறையில் M.R.P. போன்று விதிக்க படவேண்டும்.24. விளையாட்டு போட்டிகள் நடத்துவதால் வரும் வருமானத்தை விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவம் மைதானங்களை பராமரிக்கவும் செலவழிக்க வேண்டும். தரமற்ற முறையில் செய்யப்படும் அரசு வேலைகளை செய்யும் கான்ட்ராக்டர்களை தண்டிக்க வேண்டும்................... இன்னும் தொடரும்.

Rate this:
விவசாயி - Tiruppur,இந்தியா
27-மே-201921:46:53 IST Report Abuse

விவசாயி அட பொய் புழுகு வந்தாச்சா.........உனக்கு சரியான ஆள் தமிழ்மைந்தன் .....அவரை காணவில்லை..........

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X