சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: 'ரபேல்' வழக்கில் மத்திய அரசு பதில்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ரபேல், மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்,சி.பி.ஐ.,

புதுடில்லி: 'முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தலையிட முடியாது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த நிலையில், 'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது மற்றும் சி.பி.ஐ., விசாரணை நடத்துவது போன்ற கேள்வி எழாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரான்சிடம் இருந்து, 'ரபேல்' ரக போர் விமானங்கள், 36 வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் மோசடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'ஒப்பந்த நடைமுறை உள்ளிட்டவற்றில் மோசடி நடந்ததாக எந்த சந்தேகமும் ஏற்படவில்லை' என, கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர்கள், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷண் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த சீராய்வு மனுக்களை, மே, 10ல் விசாரித்த, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, மூன்று நீதிபதிகள் அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில், மத்திய அரசின் சார்பில், எழுத்து பூர்வமான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






அதில் கூறியுள்ளதாவது: ரபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில், ஒப்பந்த நடை முறை, விலை மற்றும் பிரிட்டன் நிறுவனத்தின் துணை நிறுவனமாக, இந்திய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கடந்தாண்டு இறுதியில் அளித்த தீர்ப்பில், இந்த மூன்று பிரச்னைகளுக்கும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, 'முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற பிரச்னைகளில், நீதிமன்றம் தலைமையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த நிலையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல், பொய்யான காரணங்களை கூறி, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பத்திரிகைகளில் வெளியான கட்டுரை மற்றும் ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருட்டுத்தனமாக நகல் எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. முக்கிய வழக்கில் கூறப்படாத பிரச்னையை முன்வைத்து, சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது. முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. அதனால், இந்த விவகாரத்தில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது, சி.பி.ஐ., விசாரணை போன்றவை குறித்த கேள்வியே எழவில்லை. அதனால், சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BJP TEAM - மதுரை,இந்தியா
27-மே-201900:49:21 IST Report Abuse
BJP TEAM ரபேல் முன்பே வந்திருந்தால் பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்கலாம் , தேச விரோத காங்கிரஸ் காரனுங்க செஞ்ச வேல தான் .
Rate this:
Share this comment
Cancel
BJP TEAM - மதுரை,இந்தியா
27-மே-201900:46:34 IST Report Abuse
BJP TEAM சுப்பிரமணிய சுவாமியை மறுபடி களத்தில் இறக்கினால் தான் காங்கிரஸ் காரனுங்க சரிபட்டு வருவானுங்க
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
27-மே-201900:44:08 IST Report Abuse
chails ahamad அரசு அலுவலகங்களில் கசியப்பட்ட ரபேல் விமான கொள்முதல் ஆவணங்கள் உண்மையானது என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை என்கின்ற போது , அந்த ஆவணங்களை நீதிமன்றம் ஏற்று கொண்டு குற்றம் இழைத்தவர்களை அடையாளம் காண்பது அவசியமே என்பதால் , நீதிமன்றம் தனது தார்மீக பொறுப்பை உணர்ந்து ஆட்சியாளர்களின் அபிலாசைகளுக்கு உள்படாது குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவது அவசியமாகும் , அதுவே நீதிமன்றங்களின் நம்பக தன்மைகளை உறுதிபடுத்திடும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X