பதிவு செய்த நாள் :
43 சதவீத எம்.பி.,க்கள் மீது கிரிமினல் வழக்கு

புதுடில்லி:'புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, எம்.பி.,க்களில், 43 சதவீதம் பேர் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன' என, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீரமைப்பிற்கான சங்கம் என்ற, தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது.

 எம்.பி., கிரிமினல், வழக்கு


அதன் விபரம்:ஆய்வுக்கு, 539 எம்.பி.,க்களின் வழக்கு விபரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர்களில், 233 பேர், அதாவது, 43 சதவீதம் பேர் மீது,கிரிமினல் வழக்குகள் உள்ளன.அவர்களில்,

116 பேர், பா.ஜ.,வினர்; இது, அந்த கட்சி, எம்.பி.,க் களில், 39 சதவீதம். காங்கிரசில், 29 எம்.பி.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன; இது அக்கட்சி எம்.பி.,க்களில், 57 சதவீதம். அது போல, ஐக்கிய ஜனதா தளம், 13; தி.மு.க.,10; திரிணமுல் காங்.,ல்
9 சதவீத எம்.பி.,க்கள் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இப்போதைய, எம்.பி.,க்களில், 29 சதவீதம் பேர் மீது, கற்பழிப்பு, கொலை, கொலை முயற்சி அல்லது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளன. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றவர்களில், 185 எம்.பி.,க்கள் மீது இருந்த கிரிமினல் வழக்கு களில், 112 எம்.பி.,க்கள் மீதான வழக்குகள், மிகவும் கொடியவழக்குகள்.கடந்த, 2009 லோக்சபா எம்.பி.,க் களுடன் ஒப்பிடுகை யில், புதிய, எம்.பி.,க்கள் மீதான கிரிமினல் வழக்குகள், 109 சதவீதம் உயர்ந்துள்ளன.


பா.ஜ.,வில், 5; பகுஜன் சமாஜில், 2; காங்கிரஸ்,

Advertisement

தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்., -காங்., மற்றும் சுயேச்சை என, தலா, ஒரு, எம்.பி., மீது கொலை வழக்குகள் உள்ளன.காங்கிரசின், டீன் குரியகோஸ் என்ற, எம்.பி., மீது, 204 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவற்றில் கொள்ளை, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைதல் போன்ற வழக்குகளும் உண்டு. பா.ஜ.,வின் பிரக்யா சிங் தாக்குர் மீது, பயங்கரவாத வழக்கு உள்ளது. இவ்வாறு, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
27-மே-201922:56:48 IST Report Abuse

venkatanஅடுத்த எலெக்க்ஷன் ல இது 100%ஆக உயரவேண்டும்.அதுவே உண்மையான வளர்ச்சி.

Rate this:
27-மே-201921:11:20 IST Report Abuse

ஆப்புநாலே வருஷத்தில் அமோக வளர்ச்சி.. அடுத்த 5 வருஷத்தில் காங்கிரசை தூக்கி சாப்பிட்டுடணும் ஆமா...

Rate this:
27-மே-201921:09:11 IST Report Abuse

ஆப்புபரவாயில்லியே...இதில் கூட பா.ஜ முண்ணனியில் இருக்குதே...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X