புதுடில்லி: 'முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தலையிட முடியாது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. 'இந்த நிலையில், 'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது மற்றும் சி.பி.ஐ., விசாரணை நடத்துவது போன்ற கேள்வி எழாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது
.ஐரோப்பிய நாடான, பிரான்சிடம் இருந்து, 36, 'ரபேல்' ரக போர் விமானங்கள், வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.இதில் மோசடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'ஒப்பந்த நடைமுறை உள்ளிட்டவற்றில் மோசடி நடந்ததாக எந்த சந்தேகமும் ஏற்படவில்லை' என, கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர்கள்,அருண் ஷோரி,யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷண்
ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல்செய்தனர்.இந்த
மனுக்களை, மே, 10ல் விசாரித்த, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான,
மூன்று நீதிபதிகள் அமர்வு, தேதி குறிப்பிடாமல்,தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
இந் நிலையில், இந்த வழக்கில், மத்திய அரசின் சார்பில், எழுத்து பூர்வமான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் கூறியுள்ளதாவது:ரபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில், ஒப்பந்த நடைமுறை, விலை மற்றும் பிரிட்டன் நிறுவனத்தின் துணை நிறுவனமாக, இந்திய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது.
கடந்தாண்டு இறுதியில் அளித்த தீர்ப்பில், இந்த மூன்று பிரச்னைகளுக்கும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, 'முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற பிரச்னைகளில், நீதிமன்றம் தலைமையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம்குறிப்பிட்டது.
தாக்கல்
இந்
நிலையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல், பொய்யான காரணங்களை
கூறி, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. பத்திரிகைகளில்
வெளியான கட்டுரை மற்றும்
ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருட்டுத் தனமாக நகல் எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்பு
இவற்றை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. முக்கிய வழக்கில்கூறப்படாத பிரச்னையை முன் வைத்து, சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது.முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்து உள்ளது. அதனால், இந்த விவகாரத் தில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது, சி.பி.ஐ., விசாரணை போன்றவை குறித்த கேள்வியே எழவில்லை. அதனால், சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (16)
Reply
Reply
Reply