கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குழந்தை விற்பனை வழக்கு அமுதவல்லி தம்பி ஆஜர்

Added : மே 26, 2019
Share
Advertisement

நாமக்கல்:குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமுதவல்லியின் தம்பியை, ஜூன், 6 வரை நீதிமன்ற காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
குழந்தைகள் விற்பனை வழக்கில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, அமுதவல்லி, அவளது கணவர் ரவிச்சந்திரன், அமுதவல்லியின் தம்பி நந்தகுமார் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், நந்தகுமாரை, ஐந்து நாள் கஸ்டடி எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு, நீதிமன்றம் அனுமதியளித்தது. ஐந்து நாள் விசாரணை முடிந்ததை அடுத்து, நேற்று நாமக்கல் குற்றவி யல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நந்தகுமார் ஆஜர்படுத்தப்பட்டான்.விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் வடிவேல், ஜூன், 6 வரை நந்தகுமாரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X