பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
லோக்சபா, தேர்தல் நடத்தை, விதிமுறைகள்,  நிறைவு!

லோக்சபா தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அமலில் இருந்த, நடத்தை விதிமுறைகள், நேற்று நிறைவடைந்தன. தொடர்ந்து, 78 நாட்களாக நீடித்த முட்டுக்கட்டை விலகியதால், புதிய திட்டங்கள், அதன் செயலாக்கம் குறித்த அறிவிப்புகளை அரசு தொடரவும், ஆய்வு செய்து, பணிகளை முடுக்கி விடவும், வழிவகை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல்; ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய, நான்கு மாநில சட்டசபை தேர்தல்; தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், சட்ட சபை இடை தேர்தல்களுக் கான அறிவிப்பு, மார்ச், 10ல் வெளியானது.

வாகன சோதனை


அந்த நாளிலேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள், நாடு முழுவதும் அமலுக்கு வந்தன; தேர்தலை நியாயமாக நடத்துவதற்காக, அரசின் புதிய திட்டங்கள் அறிவிப்பு, அத்தியாவசிய பணிகள் உள்ளிட்டவை தடைப்பட்டன.நாடு முழுவதும் வாகன சோதனை, போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக நடந்தது. இதனால், வியாபாரிகள் மற்றும் பல தரப்பினர், பல விதங்களில் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில், வேலுார் தொகுதியை தவிர்த்து, 38 லோக்சபா தொகுதிகள் மற்றும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஏப்., 18ல்

நடத்தப்பட்டது; புதுச்சேரியிலும், அன்றைய தினம் தேர்தல் நடந்தது.இதன்பின், தமிழகத்தில், நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், இம்மாதம், 19ம் தேதி நடந்தது; அனைத்து ஓட்டு களும் எண்ணும் பணி, 23ம் தேதி நடந்தது. லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

வெற்றிதமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி, 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. சட்டசபை இடைத் தேர்தலில், தி.மு.க., 13 தொகுதிகளில் வென்றது; ஒன்பது தொகுதி களை கைப்பற்றிய, அ.தி.மு.க., ஆட்சியை தக்க வைத்தது.தேர்தல் முடிவுக்கு வந்தாலும், நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், அரசின் புதிய திட்டங்கள், பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்நீடித்தது.

அமைச்சர்கள் முகாம்


குறிப்பாக, தமிழகம்

முழுவதும், வறட்சியால் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இப்பிரச்னையை தீர்ப்பதற்கு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடியாத நிலைக்கு, முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தள்ளப்பட்டு இருந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, தலைமை செயலகத்திற்கு வந்து, பணிகளை செய்ய முடியாமல், சொந்த மாவட்டங்களிலேயே, அமைச்சர்கள் முகாமிட்டிருந்தனர்.

நாடு முழுவதும் உள்ள, அனைத்து மாநிலங்களிலும், இதே நிலை தான் நீடித்தது.'தேர்தல் நடத்தை விதிமுறைகள், மே, 27ல் முடியும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், புதிய பிரதமராக, மோடி, வரும், 30ம் தேதி பதவியேற்க உள்ளார். இதனால், தேர்தல் நடத்தை விதிகளை, தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால், தேர்தல் நடத்தை

விதிகளை, தேர்தல் ஆணையம், நேற்று தளர்த்தியது.

தகவல்


தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதால், இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையத்தின் செயலர், அஜோய் குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலர், அனைத்து மாநில தலைமை செயலர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, அவர் முறைப்படி தெரிவித்து உள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளால், 78 நாட்களாக நீடித்த முட்டுக் கட்டை விலகியுள்ளது. இதனால், நாடு முழுவதும், மாநிலங்களில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்வதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கை களும், இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளன. வழக்க மான பணிகளை மேற்கொள் வதற்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், இன்று, தலைமை செயலகம் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர்,மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்பு என, டில்லியில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பதவியேற்பு நடவடிக்கைகள் முடிந்த பின், மத்திய அரசின் நடவடிக்கைகளும், இயல்பு நிலைக்கு திரும்பும்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-201921:02:30 IST Report Abuse

ஆப்புஇனிமே ஃப்ரீயா தங்கம், கஞ்சா, பணம் கடத்தலாம்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-மே-201917:30:38 IST Report Abuse

இந்தியன் kumarஒரு வாரத்தில் இரண்டு கட்டம் ஒரு மாதத்துக்குள் எட்டு கட்டம் அடுத்த முறை இப்படி இருந்தால் நல்லது.

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
27-மே-201916:20:29 IST Report Abuse

siriyaarTwo options for palanisamy now good direction. Cut the govt employee salary by 50% for people who earn over 15000. And use this money for shut TASMAC and reduce bus fare by 30 % and reduce EB Bill's by 30 %. So government servants protest DMK will support people will know why they pay more who is behind never b let it be 90 days or more protest without any investment on protest admk will earn good name. Another bad way give weekly one quarter per washer card free for men. Give all Tamil channels free in govt TV so women happy. Allow living together life officially so that Jamal supporters back to admk. Else prepare for exit in 2021

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X