பொது செய்தி

தமிழ்நாடு

பெரம்பலுாரில் கட்டப்படும், 'தெர்மாகோல்' வீடு: 'ஏசி'யே இல்லாமல் எப்போதும், 'குளுகுளு'

Updated : மே 27, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
பெரம்பலுார்:-பெரம்பலுார் அருகே, 'தெர்மாகோல்' என்ற செயற்கை ரசாயண அட்டையால் கட்டப்பட்டு வரும் வீட்டை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.பெரம்பலுார், செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர், 40; ஸ்டூடியோ வைத்துள்ள இவர், தெர்மாகோல் மூலம் வீடு கட்டிவருகிறார்.தொழில் ரீதியாக, கோவையில், ஒரு வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அந்த வீட்டில்
 பெரம்பலுாரில், கட்டப்படும், 'தெர்மாகோல்' வீடு, 'ஏசி'யே இல்லாமல், எப்போதும், 'குளுகுளு'

பெரம்பலுார்:-பெரம்பலுார் அருகே, 'தெர்மாகோல்' என்ற செயற்கை ரசாயண அட்டையால் கட்டப்பட்டு வரும் வீட்டை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
பெரம்பலுார், செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர், 40; ஸ்டூடியோ வைத்துள்ள இவர், தெர்மாகோல் மூலம் வீடு கட்டிவருகிறார்.தொழில் ரீதியாக, கோவையில், ஒரு வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அந்த வீட்டில் வழக்கத்துக்கு மாறாக, மின்விசிறி, 'ஏசி' ஏதும் இயங்காத நிலையில், வெயிலின் தாக்கம் இன்றி, குளுமையாக இருந்துள்ளது.

வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது, அந்த வீடு, தெர்மாகோல் மூலமாக கட்டப்பட்டது தெரிந்தது. ஆரம்பத்தில் இதை நம்பாதவர், இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது, இது சாத்தியம் தான் என தெரிந்தது.இது குறித்து, 'ஆன்லைனில்' தகவல்கள் தேடினார். இது போன்ற வீடுகள், வெளிநாடுகளில் அதிக அளவில் கட்டப்பட்டு வருவதை தெரிந்த ராமர், அது போன்ற ஒரு வீட்டை தானும் கட்ட முடிவு செய்தார். முதலில் எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், பின்சம்மதித்தனர்.இதையடுத்து, தரை தளத்தில் ஸ்டூடியோவும், முதல்தளத்தில் வீடும் கட்ட திட்டமிட்டு, இன்ஜினியர் ஆனந்தகீதன் என்பவர் மூலம், தெர்மாகோல் வீட்டை கட்டி வருகிறார். கட்டுமான பணிகள், 50 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்து விட்டன.

இன்ஜினியர் ஆனந்தகீதன் கூறியதாவது:தெர்மாகோல் தொழில்நுட்பம் மூலம், வெளிநாடுகளில் அதிகமாக வீடுகள் கட்டி வருகின்றனர். நாங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆரம்பத்தில் தனி நபர் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்தோம்.தொடர்ந்து, ஒருவருக்கு, மாடியில் அறை கட்டிக்கொடுத்தோம்.படிப்படியாக, தற்போது, 'ஆர்டர்கள்' வருகின்றன. இதற்காக, அளவுகள் எடுக்கப்பட்டு, தேவையான அளவுகளில், 'வெல்ட்மெஷ்' என்ற கம்பி வலைகளுக்கு இடையே, 3 அங்குலம் அளவுள்ள தெர்மாகோல்களை வைத்து, பேனல்களாக தயாரித்து, அதை எடுத்து வந்து, சுவர்களுக்கு பதிலாக, பொருத்தி உள்ளோம்.அதன் மீது சிமென்ட், சிப்ஸ் ஜல்லி, 'எம்.சாண்ட்' கலவையால் பூச்சு வேலை செய்வோம். 50 சதவீத கால நேரமும், பொருள் விரயமும் குறையும்.

மேற்கொண்டு, செங்கல், கருங்கல், மணல் எதுவும் தேவையில்லை. இந்த தொழில்நுட்பத்திற்கு ஆட்கள் செலவும், மிக மிகக்குறைவு. தண்ணீர் செலவும் மிகக்குறைவு.மொத்த செலவில், 15 சதவீதம் குறையும். மேலும், வீட்டின் எடையும் மிகக்குறைவு. எளிதில் விரிசல் விழாது. சூறாவளி, கடும் மழை போன்ற அனைத்தையும் தாங்கும்.

தற்போது ஏற்பட்டுள்ள மணல் மற்றும் செங்கல் தட்டுப்பாட்டிற்கு, இந்த தொழில்நுட்பம் மிகவும் ஏற்றதாகும்.இதற்கு முன்னதாக, 'கஜா' புயல் பாதித்த பகுதிகளில், ஒரு வீடு கட்டி கொடுத்திருந்தோம். கஜா புயலால் அந்த வீடு மீது, இரண்டு மரங்கள் விழுந்தபோதும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.இவ்வாறு அவர்கூறினார்.ராமர் கூறுகையில், ''1,150 சதுர அடி பரப்பளவில், 10 லட்சம் ரூபாய் செலவில், தெர்மாகோல் வீடு கட்டுகிறேன். அஸ்திவாரம் போட்ட பின், சுற்றிலும் இரும்பு கம்பிகள் மற்றும் அதற்கு இடையில் தெர்மாகோல் வைக்கப்பட்டு, வீடு கட்டப்பட்டு வருகிறது,''என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-மே-201919:35:18 IST Report Abuse
தமிழவேல் நம்ம தெர்மாகோல் ராஜ் என்ன சொல்றாரு ?
Rate this:
Cancel
murugan papaiyan - Doha,கத்தார்
27-மே-201914:55:00 IST Report Abuse
murugan papaiyan வெளிநாடுகளில் extruded polystyrene எனப்படும் density அதிகமான insulation போர்டு வைத்து pre concrete என்னும் முறையில் construction பண்ணுவார்கள். அந்த முறையில் load bearing capacity இருக்கும் ஆனால் இவர் கட்டும் தெர்மோகோல் வீடு load எதுவும் தாங்காமல் failure ஆக சான்ஸ் அதிகம்.. இவர் ஒரு structural engineer இடம் design டீடெயில்ஸ் கேட்பது நல்லது.
Rate this:
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
27-மே-201907:09:35 IST Report Abuse
RR Iyengar அந்நிய நாட்டு மோகம் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு ஒரு பக்கா உதாரணம். தெர்மகோலை விட தென்னங்கீற்று கூரை, மண்ணாலான மாட்டு சாணம் மொழுகப்பட்ட வீடு குளுகுளுவென்று இருக்கும் ... தெர்மாகோல் தீப்பிடித்தால் அரசு நிவாரணம் கேட்கலாமே ... இலவசத்துக்கு அடிமையான கூட்டம்
Rate this:
crap - chennai,இந்தியா
27-மே-201908:50:44 IST Report Abuse
crapஅண்ணே கொஞ்சம் யோசிங்க. நம்ம நாட்டு ஜனத்தொகைக்கு வீடு கட்டும் அளவுக்கு தென்னை மரங்கள் உங்க தோப்புல இருக்குங்களா? இல்லை அறிவு கொஞ்சமும் இல்லாத நம்ம மாக்கள் (மக்கள் அல்ல) இருக்கும் தென்னை மரங்களை விட்டு வைப்பார்களா? ஏற்கனவே ஆறுகளின் அடிமடியை சுரண்டிய மாக்கள் மண்ணால் வீடுகட்ட ஆரம்பித்தால் இந்த மண்ணின் நிலை என்ன ஆகும்? இயற்கையை காப்பாற்ற வேண்டுமென்றால் அதை அறிவில்லாத மக்களின் கையில் கிடைக்காதபடி செய்தால் மட்டும் நடக்கும்....
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
27-மே-201911:54:35 IST Report Abuse
BoochiMarunthuஉன் வீடு மாட்டு சாணம் மொழுகப்பட்ட வீடா? நீ கார் பைக் இல் போறியா இல்ல மாட்டு வண்டியா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X