அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராஜ்யசபாவுக்கு போட்டா போட்டி
அ.தி.மு.க., - தி.மு.க., திணறல்

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு, அடுத்த மாதம், ஆறு எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனால், அந்தப் பதவியை பெற, முக்கிய நிர்வாகிகள் முட்டி மோதுகின்றனர்.

ராஜ்யசபா, போட்டா போட்டி, அ.தி.மு.க.,  தி.மு.க., திணறல்ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, அ.தி.மு.க., வை சேர்ந்த மைத்ரேயன், அர்ஜுனன், ரத்தினவேல், லட்சுமணன்; தி.மு.க.,வை சேர்ந்த, கனிமொழி; இந்திய கம்யூ., ராஜா ஆகிய ஆறு பேர் பதவிக்காலம், ஜூன், 24ல் முடிகிறது. புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்ய, அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது.


ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு தேவை. தமிழகத்தில், 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., சார்பில், நான்கு; தி.மு.க., சார்பில், மூன்று எம்.பி.,க்களை, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யும் நிலை இருந்தது.


இடைத்தேர்தலில், தி.மு.க., 13 தொகுதிகளிலும்,

அ.தி.மு.க., ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க.,வின் பலம் குறைந்து உள்ளதால், மூன்று எம்.பி.,க்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். தி.மு.க.,வும், மூன்று எம்.பி.,க் களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்து உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா, 'சீட்' வழங்க, ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ளது. மீதமுள்ள இரண்டில், ஒன்றை, பா.ஜ.,வுக்குஒதுக்கவும் பேச்சு நடந்துஉள்ளது. மீதி ஒரு இடம் உள்ளது.தற்போது, பதவி காலம் முடிவடைய உள்ள மைத்ரேயன், மீண்டும் வாய்ப்பு கேட்கிறார். லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அமைச்சர் ஜெயகுமாரின் மகன், ஜெயவர்தன் மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோரும் மோதுகின்றனர்.


இதனால், அ.தி.மு.க.,வில், நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தோல்வி அடைந்தவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடையாது என, முடிவெடுத்து, மைத்ரேயனுக்கே மீண்டும் வாய்ப்பு தரப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், தி.மு.க., சார்பில், ராஜ்யசபாவுக்கு, மூன்று எம்.பி.,க் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ம.தி.மு.க.,வுக்கு ஒரு இடம்ஒதுக்கப்பட்டுள்ளது; மீதி இரண்டு இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கிற்காக காங்., மேலிடம் கேட்கிறது.மன்மோகன் சிங்கை எம்.பி.,யாக்கினால், பா.ஜ.,வின் அதிருப்தியை நேரடியாக சந்திக்க நேரிடும்

Advertisement

என்பதால், தி.மு.க., தயங்குகிறது. இதற்கிடை யில், ஸ்டாலின் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோரும், எம்.பி., பதவியை எதிர்பார்க்கின்றனர். தொழிற்சங்க தலைவர், சண்முகம், சுப்புலட்சுமி ஜெகதீசன், முகமது சகி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும், மோதுகின்றனர். சிறுபான்மை சமுதாயத் தினருக்கு, லோக்சபா தேர்தலில் வாய்ப்பு தராததால், தி.மு.க.,வில் அதிருப்தி குரல் ஒலிக்கிறது.இதுகுறித்து, கிறிஸ்தவ பிஷப்புகள், ஸ்டாலினி டம் நேரடியாக கேள்வி எழுப்பினர். எனவே, அதிருப்தியை சமாளிக்க, கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவருக்கு, பதவி தர வேண்டிய நிர்பந்தமும், ஸ்டாலினுக்கு ஏற்பட்டு உள்ளது.எனவே, அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் தலைமைகளும், யாரை தேர்வு செய்வது என, திணறி வருகின்றன.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dumil Makkal - Madras,இந்தியா
29-மே-201906:33:49 IST Report Abuse

Dumil Makkalயாருக்கு குடுத்தாலும் உண்டியல் கட்சிக்கு கொடுக்காதீர்கள் ,உண்டியல் ராஜா க்கு ஜெயலலிதா போட்ட MP பிச்சை ,கடைசியில் ஜெயலலிதாவையே திட்டினான்

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-மே-201904:07:57 IST Report Abuse

J.V. Iyerகலிகாலம்டா..

Rate this:
sankar - ghala,ஓமன்
27-மே-201919:26:33 IST Report Abuse

sankar"மன்மோகன் சிங்கை எம்.பி.,யாக்கினால், பா.ஜ.,வின் அதிருப்தியை நேரடியாக சந்திக்க நேரிடும்என்பதால், தி.மு.க., தயங்குகிறது", நீ தான் 37 mp வச்சிருக்கியே அப்புறம் என்ன பயம் , அப்போ பாராளமன்றத்தை கலக்குவோம் , பிஜேபி பாட படுத்துவோம் சொன்னத எல்லாம் வெறும் வெட்டி பேச்சா

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
29-மே-201913:28:09 IST Report Abuse

Jaya Ramஅதாங்க உண்மை இவர்கள் பதவியில்லாமல் இருக்க முடியாது , 2g கேஸ் வேற இருக்கு எனவே இவர்கள் அவர்களிடம் பயந்துதான் கிடப்பார்கள் காரியம் , பணம் பார்க்க வேண்டாமா ? ...

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X