சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் சிகரெட் பிடித்தவன் கைது

Added : மே 26, 2019 | கருத்துகள் (8)
Advertisement

சென்னை: விமானத்தில், சிகரெட் பிடித்த நபரை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

குவைத்தில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை வந்து கொண்டிருந்தது.அதில் வந்த பயணி ஒருவன், விமான பாதுகாப்பு சட்டத்தை மீறி, பறந்து கொண்டிருந்த விமானத்தில், சிகரெட் பற்ற வைத்து, சக பயணியர் முகத்தில், புகையை ஊதினான். இதற்கு, சக பயணியர் எதிர்ப்பு தெரிவித்தனர்.விமான பணிப் பெண்கள், அவனிடம் இருந்து, வலுக்கட்டாயமாக சிகரெட்டை பறித்து, அணைத்தனர். இதனால் ஆத்திரமடைந்தவன், பணிப்பெண்கள் மற்றும் சக பயணியரை, தகாத வார்த்தைகளால் திட்டினான்.

இது குறித்து விமான பைலட், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,க்கு தகவல் கொடுத்தார்.அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு தரையிறங்கியது.தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் ஏறி, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விமான நிலைய போலீசார் விசாரணையில், அவன், தஞ்சையைச் சேர்ந்த, இஸ்மாயில், 33, என்பதும், குவைத்தில், ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியதும் தெரிந்தது.விமான நிறுவனம், விமான நிலைய மேலாளர் அளித்த புகாரின்படி, இஸ்மாயில் கைது செய்யப்பட்டான்; அவனிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-மே-201910:41:16 IST Report Abuse
Cheran Perumal குவைத்தில் பாதுகாப்பு குளறுபடி. இந்திய அதை சரியான தளத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Uthiran - chennai,இந்தியா
27-மே-201909:54:34 IST Report Abuse
Uthiran பாதுகாப்பு சோதனையில் தீப்பெட்டி லைட்டர் முதலான சகல தீப்பற்றக்கூடிய பொருட்களையும் பிடுங்கி விடுவார்கள். நம்மூரில் சில விமான நிலையங்களில் தண்ணீர் கூட நூறு மில்லிக்கு மேல் பாதுகாப்பு சோதனையின் போது அனுமதிப்பதில்லை. அப்படி இருக்கும் போது குவைத் விமான நிலையத்தில் எப்படி தீப்பற்ற கூடிய பொருட்களை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக அங்கே பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது போல் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
27-மே-201909:53:09 IST Report Abuse
sivam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X